34
சினிமாசெய்திகள்

“லெனின்” படத்தில் இருந்து விலகிய ஸ்ரீலீலா..!படத்தின் ஹீரோயினி யார் தெரியுமா?

Share

பிரபல தெலுங்கு நடிகரும் தயாரிப்பாளருமான நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் அக்கினேனி, புது பரிமாணத்துடன் திரையில் மின்னப் போகும் படம் தான் ‘லெனின்’. இந்தப் படத்தை திறமையான இயக்குநர் “கிஷோர் அப்புரு” இயக்குகிறார். ஆரம்பத்தில் இப்படத்தில் கதாநாயகியாக ஸ்ரீலீலா தேர்வு செய்யப்பட்டிருந்தார். ஆனால் சமீபத்தில் ஏற்பட்ட சில மாற்றங்கள் காரணமா படத்தில் இருந்து விலகியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன .

“கால் சீட்டிங் தொடர்பான சில திட்டமிடல் சிக்கல்கள்” காரணமாக ஸ்ரீலீலா இப்படத்திலிருந்து விலகியுள்ளதாக கூறப்படுகிறது. சினிமா உலகில் பொதுவாகக் காணப்படும் இந்த மாதிரியான திகதிகளில் முரண்பாடுகள், நட்சத்திர நடிகர்களின் கால அட்டவணைகளுடன் ஒத்துப்போகாமல் இருக்கும் போது, இப்படியான மாற்றங்கள் தவிர்க்க முடியாமல் போகின்றன.

மேலும் ஸ்ரீலீலா விலகிய பின்னர், ‘லெனின்’ படக்குழு, புதிய ஹீரோயினைத் தேர்ந்தெடுக்க பல்வேறு நடிகைகளுடன் பேசிக்கொண்டிருந்தது. இதற்கிடையில், பல முன்னணி மற்றும் புதுமுக நடிகைகள் பரிசீலிக்கப்பட்டனர். அப்போது பாக்யஸ்ரீ போர்ஸ் ப்ளெனுக்கு வருகிறார். தொடர்ச்சியான உழைப்பு, இயல்பான நடிப்பு, கிளாசிக் அழகு என பல அம்சங்களால் கவனம் பெற்ற பாக்யஸ்ரீ, தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் ஏற்கனவே சில படங்களில் சிறப்பாக நடித்துள்ளார். இப்போது, ‘லெனின்’ போன்ற முக்கிய படத்தில் அவரை தேர்ந்தெடுத்தது, அவருடைய திரையுலக பயணத்தில் ஒரு திருப்புமுனையாக அமைய போகின்றது.

பாக்யஸ்ரீ போர்ஸை ஹீரோயினாக உறுதி செய்தது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை, ஆனால் படத்திட்டத்துடன் நெருங்கிய வட்டாரங்களில் இருந்து வந்த தகவலின்படி, படக்குழு அவரை தேர்வுசெய்தது உறுதியாக இருக்கிறது. விரைவில் இந்த அறிவிப்பு பத்திரிகை வாயிலாகவும், சமூக வலைத்தளங்களிலும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் அகில் அக்கினேனியின் திரும்பவும் வருகையை குறிக்கும் ‘லெனின்’ படத்தில், ஹீரோயினாக பாக்யஸ்ரீ போர்ஸ் இணைவது, புதிய கலவையுடன், புதிய சக்தியைப் படத்துக்கு தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்களும், புதிய அப்டேட்களும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...