Manippay 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நவாலி தாக்குதல் – மூவர் 24 மணித்தியாலத்தில் கைது!!

Share

மானிப்பாய் நவாலி பகுதியில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை வீடு ஒன்றுக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நவாலி மற்றும் கொக்குவிலைச் சேர்ந்த மூன்று சந்தேக நபர்களே யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் இன்று கைது செய்யப்பட்டனர்.

குறித்த சந்தேக நபர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் 2 வாள்களும் மீட்கப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டுக்குள் புகுந்த கும்பல் பெற்றோல் குண்டுத் தாக்குதலை மேற்கொண்டிருந்ததுடன் பெறுமதியான பொருள்களை சேதப்படுத்தியது.

யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழான தலைமை பொலிஸ் பரிசோதகர் நிகால் பிரான்ஸிஸ் தலைமையிலான மாவட்ட குற்றத் தடுப்பு பொலிஸ் பிரிவே இந்தக் கைது நடவடிக்கையை முன்னெடுத்தது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
mahavali
இலங்கை

மகாவலியில் மாயமான 15 வயதுச் சிறுவன் – தேடுதல் பணிகள் தீவிரம்.

கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிகல்ல – உடோவிட்ட பகுதியில் மகாவலி ஆற்றில் மூன்று சிறுவர்கள் இணைந்து...

gun p
இலங்கை

டெங்கு ஒழிப்பில் சிக்கியது துப்பாக்கி.

பெலவத்தை பகுதியில் தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு அமைவாக, மேற்கொள்ளப்பட்ட விசேட வளாகப் பரிசோதனை ஓன்றின்...

harsa
இலங்கை

நூலிழையில் உயிர் பிழைத்தார் ஹர்ஷ டி சில்வா!

நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கடந்த 20ஆம் திகதி மாலை...

car bike
இலங்கை

நுவரெலியாவில் கோர விபத்து.

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில், மல்லிப்பூ சந்திக்கு அண்மையில் நேற்று மாலை நுவரெலியா நோக்கி...