Railway Station
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வடக்கிற்கான ரயில் சேவை பாதிப்பு!

Share

ரயில்வே திணைக்கள பொறுப்பதிகாரிகள் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டும் தொழிற்சங்க போராட்டம் காரணமாக, வடக்கிற்கான ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 9: 45 மணிக்கு யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திலிருந்து புறப்படும் யாழ்தேவி புகையிரதம் சேவையில் ஈடுபட வில்லை.

அதேபோல் 1: 45 மணிக்கு புறப்படும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் புகையிரதமும் சேவையில் ஈடுபடவில்லை.

தற்போது யாழ்தேவி புகையிரதம் யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தில் தரித்து நிற்கின்றது.

இதனால் முன்பதிவு செய்து புகையிரதத்தில் பயணம் செய்வதற்கு வருகைதந்த பயணிகள் பல்வேறு அசௌகரியங்களை எதிர் கொண்டதுடன் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளனர்.

நாளைய தினம் தமிழர்களின் முக்கிய பண்டிகையான தைப்பொங்களுக்கு வெளிமாவட்டங்களுக்கு செல்ல இருந்தவர்களும் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்ற நிலையைக் காணக்கூடியதாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Namal Rajapaksa 03
இலங்கை

நாமல் ராஜபக்சவுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுகள்.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக பணச்சலவை தடுப்புச்சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணையினை...

IGP C. D. Wickramaratne
இலங்கை

சி.டி. விக்கிரமரத்னவின் 16 ஆண்டு கால மெய்ப்பாதுகாவலர் வழங்கிய சாட்சியம்.

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்ன துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் தொடர்பான நீதவான்...

Missing Persons 1
இலங்கை

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் எந்த நீதியும் கிடைக்கவில்லை – விஜயகுமார்.

வடக்குக் கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் ஆராய்வதற்காக உருவாக்கப்பட்ட சங்கங்கள் மற்றும் ஒன்றியங்களில் அனுபவம் மிக்கவர்கள்...

அச்சுறுத்த
இலங்கை

அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் கலை.

இசையமைப்பாளர் பூவன் மதீசன், சமூக பிரச்சினைகளை பாடல்களில் எடுத்துக் கூறியதால் பல அச்சுறுத்தல்களை சந்தித்ததாக தெரிவித்துள்ளார்....