153224 strike
இலங்கைசெய்திகள்

நாளை நாடு முடங்கும்!!

Share

பேச்சுவார்த்தைக்கு வர அரசாங்கம் மறுத்தால், நாளை புதன்கிழமை (15) வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

குறைந்தபட்சம் ஆறு மாத காலத்துக்கு எந்தவொரு வரியையும் அரசாங்கத்தால் மாற்றியமைக்க முடியாது என்று நிபுணத்துவ தொழிற்சங்கக் கூட்டமைப்பு வெள்ளிக்கிழமையன்று நிதியமைச்சின் செயலாளரைச் சந்தித்த போது அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், புதன்கிழமைக்கு முன்னர் பேச்சுவார்த்தையில் ஈடுபட அரசாங்கம் மறுப்பு தெரிவித்தால் சுகாதாரம், கல்விச்சேவை, நீர் விநியோகம், மின்சாரம், தாதிமார், ஆசிரியர் சேவை,  அரச மற்றும் அரசு சார் தொழிற்சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பல்வேறு துறையினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அன்றையதினத்தில் அனைத்து வைத்தியர்களும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் சமில் விஜேசிங்க தெரிவித்தார்.

மகப்பேறு மற்றும் சிறுவர் வைத்தியசாலைகள், தேசிய புற்றுநோய் நிறுவனம், தேசிய மனநல நிறுவனம், சிறுநீரக சிகிச்சை பிரிவுகள், இராணுவ  வைத்தியசாலைகள் மற்றும் அவசர சிகிச்சைகள் பாதிக்கப்படாது என்றும் அவர் உறுதியளித்தார்.

பேச்சுவார்த்தைக்கு வராவிட்டால் நாளை 15ஆம் திகதி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் தலைவர் சன்ன திஸாநாயக்க தெரிவித்தார்.

இதேவேளை, கொழும்பு லேக்ஹவுஸ் சுற்றுவட்டத்தில் இன்று (14) போராட்டங்கள் இடம்பெறவுள்ளதுடன், இலங்கையின் முக்கிய நகரங்களில் மற்ற போராட்டங்கள் நடைபெறும் என்றும் தெரியவருகிறது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...