gota ranil 2
அரசியல்இலங்கைசெய்திகள்

ரணில் – ராஜபக்‌ஷ அரசாங்கமே இது!

Share

நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உருவாக்கப்பட்ட அரசாங்கம் சவால்களை எதிர்கொண்டு முன்னோக்கி செல்கின்றது. இந்த அரசாங்கம் ரணில் – ராஜபக்‌ஷ அரசாங்கம் என்பதில் மறைப்பதற்கு ஒன்றுமே இல்லை என ஆளுங்கட்சி பிரதம கொறடாவும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இப்போதும் ரணில் -ராஜபக்‌ஷ அரசாங்கமே ஆட்சி செய்து வருகின்றது. பாராளுமன்றத்தில் பெரும்பான்மையாக உள்ள ராஜபக்‌ஷ  அணியும், ரணில் விக்கிரமசிங்க என்ற தனி ஒருவரும் இணைந்து அரசாங்கத்தை கொண்டு செல்கிறோம். இதில் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை, அடுத்த தேர்தலிலும் மீண்டும் இரு தரப்பும் ஒன்றிணைந்து அரசாங்கத்தை அமைக்க முடியும். இதன்போது  மேலும் பல கட்சிகளுடன் நாம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றோம் எனவும் அவர் தெரிவித்தார்.

ரணில் விக்கிரமசிங்க மற்றும் மஹிந்த ராஜபக்‌ஷ  ஆகிய இருவருமே அனுபவம் வாய்ந்தவர்கள். எமது அணியும் அனுபவம் மிக்க அணியாக உள்ளது. ஆகவே இருவரும் இணைந்து பயணிப்பதுடன் மேலும் ஏழு அல்லது எட்டு கட்சிகளை ஒன்றிணைத்து  பயணிக்க பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1500x900 175299 dead body
இலங்கை

நீர்கொழும்பு சிறையில் மீண்டும் வெடித்த மோதல் – இந்திய பிரஜை ஒருவர் மரணம்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் ஏற்பட்ட மோதல்களுக்குப் பின்னர் அங்கு...

veppam
இலங்கை

கிழக்கினை தாக்கவுள்ள வெப்ப அலை – பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

நாளைய தினம் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில பகுதிகளில் மனித உடலால் உணரப்படும்...

mini 1
இலங்கை

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு.

இன்றைய தினம் காலை (08.07. 2026) ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் இலஞ்ச ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட...

nilam
இலங்கைபிராந்தியம்

யாழ். வடமராட்சியில் பறிபோக இருக்கும் நிலம் – தொடரும் அத்துமீறல்கள்

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் உள்ள காணியொன்று இராணுவத்தினரால் சுவீகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கை நாளை...