download 8 1 19
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

விபத்தில் இளைஞன் உயிாிழப்பு!

Share

யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியில் நேற்றைய தினம் இரவு பயணிகள் பேருந்தினை, மோட்டார் சைக்கிளில் முந்தி செல்ல முற்பட்ட வேளை எதிரே வந்த காருடன் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து சென்ற இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் ஓட்டியான இளைஞன் படுகாயங்களுடன் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோப்பாய் பூதர்மடம் பகுதியை சேர்ந்த தவசீலன் வினோயன் (வயது 20) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து அச்சுவேலி நோக்கி பயணித்துக்கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தினை கோப்பாய் பூதர்மட சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் முந்தி செல்ல முற்பட்ட வேளை எதிரே வந்த காருடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
exam hall 1
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எப்போது வெளியாகும்?

ஒரு மாத காலத்திற்குள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர்...

arested 1
இலங்கை

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கிய உறுப்பினர் போதைப்பொருள் கடத்தியமையினால் கைது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொலன்னறுவை, மெதிரிகிரிய தேர்தல் தொகுதி தலைவரும் அவரது மனைவியும், ஐஸ் மற்றும் ஹெரோயின்...

போலி நாணயத்தாள்
இலங்கை

தமிழர் பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது!

கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக இரு போலி நாணயத்தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்கள்...

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு
இலங்கை

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு!

நாவலப்பிட்டி தொகுதியின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைப்பாளர் கே.எல்.ஏ. குணசிங்க உள்ளிட்ட தொகுதிப் பிரதிநிதிகள்...