Big Onion
இலங்கைசெய்திகள்

பெரிய வெங்காயத்துக்கு வரி 40 ரூபா!

Share

பெரிய வெங்காயத்துக்கு வரி 40 ரூபா!

பெரிய வெங்காயத்துக்கான இறக்குமதி வரியை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

இதன்படி ஒரு கிலோ பெரிய வெங்காயத்துக்கு 40 ரூபா இறக்குமதி வரி விதிக்க தீர்மானம் செய்யப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு விவசாயிகளின் உற்பத்தியை பலப்படுத்தும் நோக்கில் அரசு இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.

அத்தோடு தற்போது பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்தால் உள்நாட்டு விவசாயிகள் பாதிக்கப்படுவர் என்பதன் காரணமாக இறக்குமதி வரியை 40 ரூபாவாக விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு விவசாயிகளின் வெங்காயச் செய்கையில் எதுவித பிரச்சினைகளும் தோன்றாது எனவும் அவர்களின் உற்பத்திக்கு சிறந்த விலை கிடைக்கும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
பூசா சிறைச்சாலை
இலங்கை

மஹர சிறைச்சாலையில் இருந்து இடம்மாற்றப்பட்ட கைதிகள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தினை அடுத்து, அங்கிருந்து 20 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச்...

prison
இலங்கை

கட்டுப்பாட்டிற்குள் வந்த பதற்ற நிலை – வெளியேறிய தீயணைப்பு வாகனங்கள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அனைத்துக் கைதிகளையும் தற்போது அவர்களது சிறைக்...

Scammers
இலங்கை

அமைச்சரின் பெயரில் இடம்பெறும் பாரிய மோசடி.

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க பிரதி அமைச்சரை போல் ஆள்மாறாட்டம்...

Featured
இலங்கை

மஹர சிறையில் தற்போதைய நிலை .

ராகம பொலிஸ் எல்லைக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சுற்றியுள்ள A, 246/கண்டலியத்த பாலுவ – மேற்கு, 246/C...