Lead 2
அரசியல்இலங்கைசெய்திகள்

தமிழருக்குத் தீர்வு உறுதி! – பேச்சுக்கள் தொடரும் என்கிறார் கோட்டாபய

Share

“எனது ஆட்சிக்காலத்தில் தமிழ் மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகளைக் காண்பேன். அதன் ஒரு கட்டமாகவே தமிழ் மக்களின் பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளேன்.” – இவ்வாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார்.

இது தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்றிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“அரசியல் தீர்வு, காணி விடுவிப்பு, கைதிகள் விடுதலை உள்ளிட்ட 5 விடயங்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் முதல்கட்டமாகப் பேசியுள்ளேன்.

இந்தப் பேச்சுக்குப் பல தரப்பிலிருந்தும் வரவேற்புக் கிடைத்துள்ளது. பேச்சுக்கள் தொடரும்.

தமிழ் மக்களின் சகல பிரச்சினைகளுக்கும் நான் தீர்வுகளைக் காண்பேன். இது எனது கடமை.

புலம்பெயர் தமிழர்களுடனும் நான் பேசத் தயாராகவுள்ளேன். நாட்டின் அபிவிருத்திக்கு அவர்களின் பங்களிப்பு மிகவும் அவசியம்” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Shooting 3
இலங்கை

இன்றைய தினம் நாட்டில் மற்றுமொரு துப்பாக்கிச்சூடு.

இன்று மாலை, கொழும்பு – தெமட்டகொடை, குப்பியாவத்தை மயானத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...

Shooting 2
இலங்கை

காவல்துறை உத்தியோகத்தரின் மீது துப்பாக்கி பிரயோகம்.

பெலியத்த, வலவல பகுதியில், திக்வெல்ல காவல் நிலையத்தில் கடமைற்றும் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டின் மீது...

dead body 1
இலங்கை

நீரில் மூழ்கிய சிறுவன் சடலமாக மீட்பு.

நேற்று மாலை, கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிகல்ல – உடோவிட்ட பகுதியில், நான்கு சிறுவர்கள் இணைந்து...

low r 2
இலங்கை

க.பொ.த உயர்தரப் பரீட்சை பிற்போட படுமா? – நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு.

இவ்வருடம் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு முதலாம் மற்றும் இரண்டாம் தடவைகளாகத் தோற்றவுள்ள மாணவர் குழுவொன்றினால் தாக்கல்...