முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு வழங்கப்பட்ட இரண்டு தண்டனைகள் மிகவும் கடுமையானவை என்று வெகுஜன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் அண்மையில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனைக்கு மேலதிகமாக விருப்பு வாக்குகளுடன் வெற்றி பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும் ரத்துசெய்யப்பட்டுள்ளது.
இது ஒரு குடிமகனுக்கு வழங்கக்கூடிய கடுமையான தண்டனை என்று தனிப்பட்ட முறையில் கருதுகிறேன்.
ரஞ்சன் ராமநாயக்கவுக்கு சிறைத்தண்டனை மற்றும் அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி ரத்து போன்ற இரண்டு தண்டனைகள் கிடைப்பது மிகவும் கடுமையானது.
இதற்கு மேலும் அவரை தண்டிக்க ஜனாதிபதி கருதக்கூடாது. மேலும் அவரைப் பற்றி எதிர்மறையாக சிந்திக்காது நல்ல விதமாகச் சிந்திக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Leave a comment