UwtufFGtlD2dPq2iF7mv
இலங்கைசெய்திகள்

உணவகமாக இயங்கி வந்த மதுபான விடுதி சுற்றிவளைப்பு!

Share

மிரிஹான பிரதேசத்தில் உணவகம் என்ற போர்வையில் இயங்கி வந்த மதுபான விடுதியொன்றை பாணந்துறை ஊழல் ஒழிப்பு பிரிவினர் சுற்றிவளைத்துள்ளனர்.

இதன்போது, மதுபான நிலையத்தை நடத்திவந்த உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சோதனை நடவடிக்கையின் போது, ​​57 வகையான மதுபான போத்தல்கள், 119 பியர் டின்கள் மற்றும் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மதுபானங்கள் மற்றும் சிகரெட்டுகள் என்பவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

மீட்கப்பட்ட மதுபானத்தின் பெறுமதி 10 இலட்சம் ரூபாவிற்கும் அதிகம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நுகேகொட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

பாணந்துறை வலான மத்திய ஊழல் தடுப்பு அதிரடிப் படையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
anura kumara 1
இலங்கை

பிரதேச செயலகங்களில் இடம்பெற்றுள்ள நிதி முறைகேடுகள் – ஜனாதிபதியின் அதிரடி முடிவு!

  நுவரெலியா மாவட்டத்தின் பிரதேச செயலகங்களில் இடம்பெற்றுள்ள நிதி முறைகேடுகள் குறித்து கண்டறிவதற்காக ஜனாதிபதி அநுர...

arested 3
இலங்கை

ACMC கடசியின் உப தவிசாளர் உட்பட ஐவர் போதைப்பொருளுடன் கைது.

ஹெரோயின் போதைப்பொருளுடன் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் உப தவிசாளர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர்...

death body 2
இலங்கை

கடற்கரைப் பகுதியில் மீட்கப்பட்ட சடலம்!

காலி முகத்திடலுக்கு அருகில் உள்ள கடற்கரைப் பகுதியில் இருந்து நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவரின்...

கெமுனு விஜேரத்ன
இலங்கை

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்த கெமுனு விஜேரத்ன !

தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் சமூக வலைத்தளங்கள்...