ஜீவன் தொண்டமான்
அரசியல்இலங்கைசெய்திகள்

அரசு பொறுப்புக்கூற வேண்டும்! – ஜீவன் வலியுறுத்து

Share

“மக்களால் ஜனநாயக முறையில் மேற்கொள்ளப்படும் போராட்டங்களின்போது பொலிஸார் வன்முறையைக் கையில் எடுத்துள்ளமையானது கண்டிக்கத்தக்கது.” – இவ்வாறு இ.தொ.காவின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் எம்.பி. தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-

“நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையினால் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துக்கு அரசே பொறுப்புக்கூற வேண்டியுள்ளது.

ரம்புக்கனையில் பொதுமக்களால் இன்று ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தை நிறுத்துவதற்காக ரம்புக்கனையில் பொலிஸார் நடத்திய கண்ணீர்ப் புகைக்குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து பொலிஸாரால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நால்வர் உயிரிழந்துள்ளதுடன், 16 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் பொறுப்புக்கூற வேண்டிய அமைச்சு பதிலளித்தே ஆக வேண்டும்.

நாட்டில் ஜனநாயகத்துக்கு எதிரான செயற்பாடுகள் இடம்பெறுமானால் அதை இ.தொ.கா பார்த்துக்கொண்டிருக்காது.

நாட்டில் இன்று உயிர்ச் சேதம் ஏற்படும் அளவுக்கு இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. அரசு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Tourist Visa
இலங்கை

இலங்கையர்களுக்கு அனுமதி இல்லை!

தாய்வான் வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ள புதிய வீசா கொள்கை அறிவிப்பின்படி, இலங்கை பிரஜைகளுக்கான சுற்றுலா வீசா...

dengue 1
இலங்கை

அறிகுறிகள் தென்பட்டால் ஆபத்து – உடனடியாக வைத்தியசாலையை நாடவும்.

டெங்கு அறிகுறிகள் தென்படுவோர் தாமதிக்காது உடனடியாக உரிய மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளுமாறு தேசிய டெங்கு கட்டுப்பாட்டு...

chemmani Mass grave
இலங்கை

செம்மணிக்கு செல்ல ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவிற்கு நீதிமன்றம் பச்சைக்கொடி.

ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழு, யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், செம்மணி மனிதப் புதைகுழிப் பகுதியை...

ஜி.எல். பீரிஸ்
இலங்கை

ஜெனீவாவில் இலங்கைக்கு இதுவும் நடக்கலாம் – எச்சரிக்கும் ஜி.எல். பீரிஸ்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் காரியாலயத்தில் செய்தியாளர் சந்திப்பு ஒன்று நேற்று நடைபெற்றுள்ளது. அங்கு...