image 5c99ac31d8
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பருத்தித்துறையில் 4 நாட்களாக தொடரும் மோதல்!

Share

பருத்தித்துறை துன்னாலை மேற்கு பகுதியில் இரு கிராமங்களுக்கு இடையேயான மோதலில் 4 நாள்களாக நீடிக்கும் நிலையில் ஏழு வீடுகள் சேதமடைந்துள்ளன. இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 25 மேற்பட்டோர் தேடப்பட்டு வருகின்றனர் என நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர்.

வாள்கள், கற்கள் மற்றும் போத்தல்களினால் மோதல்கள் இடம்பெறுவதாக பொலிஸார் கூறினர்

சம்பவம் தொடர்பில் 7 முறைப்பாடுகள் நெல்லியடி பொலிஸ் நிலையத்துக்கு கிடைத்துள்ளன என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.

“நான்கு நாள்களுக்கு முன்னர் இரண்டு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட முரண்பாடு மோதலாக மாற்றமடைந்தது. அது பின்னர் கிராமங்களுக்கு இடையிலான மோதலாக மாறியுள்ளது.

சம்பவத்தில் ஏழு வீடுகள் சேதமடைந்துள்ளன. சிலர் காயமடைந்துள்ளனர்.

சம்பவ இடத்தில் பொலிஸார் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். எனினும் மோதல்கள் தொடர்கின்றன.

இன்று மாலை வரை இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பெயர் குறிப்பிடப்பட்ட 25 பேர் தேடப்பட்டு வருகின்றனர்.

இன்று நண்பகல் 12.30 தொடக்கம் மாலை 6.30 மணிவரை அடங்கியிருந்து மோதல் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது” என்று பொலிஸார் கூறினர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
road closed
இலங்கை

வெள்ளப்பெருக்கினால் மூடப்பட்டுள்ள வீதிகள்.

தொடர்ந்தும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தற்போது பல பிரதேசங்களில் ஏராளமான வீதிகள் போக்குவரத்திற்கு தற்காலிகமாக...

ester attac 1
இலங்கை

பிள்ளையான் – சுரேஷ் சலே திண்டாட்டத்தில் இருப்பதாக வெளியாகிய தகவல்.

பிரித்தானியாவைச் சேர்ந்த இராணுவ ஆய்வாளர் பிரபாகரன், பிரபல ஊடக நிறுவன நிகழ்ச்சி ஒன்றில் கருத்து தெரிவிக்கும்...

Fire Breaks
இலங்கை

புறக்கோட்டை வர்த்தக நிலையத்தில் திடீரென ஏற்பட்ட தீ பரவல்.

கொழும்பு புறக்கோட்டை பிரதான வீதியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் திடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளது. குறித்த...

உடற்கூற்று பரிசோதனை
இலங்கை

மஹர சிறைக்கலவரத்தில் உயிரிழந்த நபரின் உடற்கூற்று பரிசோதனை – வெளியான தகவல்கள்.

இன்றைய தினம், மஹர சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த கைதியின் சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனை விசேட...