22 4
இலங்கைசெய்திகள்

40 ஆண்டுகளைக் கடந்தும் சிங்களவர்களின் ஆதிக்கத்திலிருந்து விடுபட முடியாத தமிழ் மக்கள் : சீமான்

Share

40 ஆண்டுகளைக் கடந்தும் சிங்களவர்களின் ஆதிக்கத்திலிருந்து விடுபட முடியாத தமிழ் மக்கள் : சீமான்

இனப்படுகொலைக்கு உள்ளாகி 40 ஆண்டுகளைக் கடந்த பின்னும் இன்றளவும் சிங்கள இனவெறி ஆதிக்கத்திலிருந்து விடுபட முடியாமல் அடிப்படை உரிமைக்காகப் போராட வேண்டிய அவலநிலையில் தமிழ் மக்கள் வாடுவது வரலாற்றுப் பெருந்துயரமாகும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் (Seeman) தெரிவித்துள்ளார்

1983 ஆம் ஆண்டு இலங்கை இனவாத அரசின் ஆதரவுடன் சிங்கள இனவெறியர்கள் தமிழர்களின் வீடுகளையும் கடைகளையும் எரித்து உடமைகளைக் கொள்ளையடித்து வீதிகள் தோறும் குருதியில் நனையஇ வீடுகள் தோறும் பிணங்கள் வீழ திட்டமிட்டு பல்லாயிரக்கணக்கான அப்பாவி தமிழ் மக்களைக் கொன்றழித்த கறுப்பு ஜூலை இனப்படுகொலை நாள் இன்று.இலங்கை

ஈழத்தாயகத்தில் தமிழர்கள் இனப்படுகொலைக்கு உள்ளாகி 40 ஆண்டுகளைக் கடந்த பின்னும் இன்றளவும் சிங்கள இனவெறி ஆதிக்கத்திலிருந்து விடுபட முடியாமல் உள்ளனர்.

மேலும், அடிப்படை உரிமைக்காகப் போராட வேண்டிய அவலநிலையில் தமிழ் மக்கள் வாடுவது வரலாற்றுப் பெருந்துயரமாகும்.

இந்நிலையில், சிங்கள இனவெறிக்கு இலக்காகி கறுப்பு ஜூலை இனப்படுகொலையில் கொல்லப்பட்ட தமிழ் மக்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கத்தைச் செலுத்துகிறேன் என்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
images 4
செய்திகள்அரசியல்இலங்கை

ரணில் – நாமல் புதிய கூட்டணி? ஐக்கிய மக்கள் சக்தியுடனான பேச்சு முறிந்தால் மாற்றுத் திட்டத்திற்கு தயார்!

ஐக்கிய தேசியக் கட்சி (UNP) மற்றும் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி (SJB)...

26 69807748e747c
செய்திகள்உலகம்

மேற்குக் கரையில் தீவிரமடையும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு: பூர்வீக நிலங்களிலிருந்து பலஸ்தீனியர்கள் வெளியேற்றம்!

இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில், பலஸ்தீனியர்களை அவர்களது பூர்வீக நிலங்களில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளை இஸ்ரேல்...

articles2FUBt74sYE7LHAHmjLFnpe
செய்திகள்அரசியல்இலங்கை

சிஐடி முன் பிரசன்ன ரணதுங்க: அரசு தனது தோல்விகளை மறைக்கவே எங்களை அழைக்கிறது!

திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் ‘கெஹெல்பத்தர பத்மே’ என்பவருடனான தொடர்பு குறித்து வாக்குமூலம் அளிப்பதற்காக, முன்னாள் அமைச்சர்...

image eae410f15d
செய்திகள்அரசியல்இலங்கை

NPP உறுப்பினர் ஜகத் மனுவர்ணவை கைது செய்ய உத்தரவு: கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை!

தேசிய மக்கள் சக்தியின் (NPP) நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ணவை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில்...