Dullas Alahapperuma
அரசியல்இலங்கைசெய்திகள்

டலஸ் அணியுடன் பேச்சு! – முண்டியடிக்கும் கட்சிகள்

Share

புதிய அரசியல் கூட்டணி தொடர்பில், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியிலிருந்து வெளியேறிய அணியுடன் பேச்சு நடத்தப்படும் – என்று சுயாதீன கட்சிகளின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே, மேற்படி சுயாதீன கூட்டணியில் அங்கம் வகிக்கும் பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில இந்த அறிவிப்பை விடுத்தார்.

” டலஸ் அழகப்பெரும, பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் உள்ளிட்ட 13 பேர் சுயாதீனமாக இயங்கவுள்ளதாக நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளனர். இவ்வாறு அவர்கள் மொட்டு கட்சியில் இருந்து வெளியேறிவிட்டதால் அவர்களுடன் பேச்சு நடத்தப்படும்.” எனவும் கம்மன்பில குறிப்பிட்டார்.

சுயாதீன அணிகள் இணைந்து விமல் வீரவன்ச தலைமையில் எதிர்வரும் 04 ஆம் திகதி புதியதொரு அரசியல் கூட்டணியை உருவாக்கவுள்ளன. அந்த கூட்டணியில் டலஸ் அணியை இணைத்துக்கொள்வதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன.

அதேவேளை, டலஸ் அணிக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் அழைப்பு விடுத்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
பூசா சிறைச்சாலை
இலங்கை

மஹர சிறைச்சாலையில் இருந்து இடம்மாற்றப்பட்ட கைதிகள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தினை அடுத்து, அங்கிருந்து 20 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச்...

prison
இலங்கை

கட்டுப்பாட்டிற்குள் வந்த பதற்ற நிலை – வெளியேறிய தீயணைப்பு வாகனங்கள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அனைத்துக் கைதிகளையும் தற்போது அவர்களது சிறைக்...

Scammers
இலங்கை

அமைச்சரின் பெயரில் இடம்பெறும் பாரிய மோசடி.

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க பிரதி அமைச்சரை போல் ஆள்மாறாட்டம்...

Featured
இலங்கை

மஹர சிறையில் தற்போதைய நிலை .

ராகம பொலிஸ் எல்லைக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சுற்றியுள்ள A, 246/கண்டலியத்த பாலுவ – மேற்கு, 246/C...