5 1
இலங்கைசெய்திகள்

வெற்றிகரமாக முடிந்த இந்திய மீனவர்படகு ஏலம்!!

Share

யாழ்ப்பாணம் காரைநகரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 135 இந்தியப் படகுகள் இன்றைய தினம் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டன.

கொழும்பில் இருந்து வந்த கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள தலைமையக அதிகாரிகள் குழு காரைநகரில் ஏலத்தில் விற்பனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இவ்வாறு விற்பனை செய்யப்பட்டுள்ள படகுகளை கடந்த ஒருவாரமாக அதிகமனோர் பார்வையிட்ட நிலையில் இன்றைய தினமும் பலரும் பார்வையிட்டனர்.

இதன்போது 88அடி நீளமான மீன்பிடிப் படகொன்று அதிக தொகையாக 13 லட்சத்து 50 ஆயிரம் ரூபாவுக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது.

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்தவர்கள் ஏலத்தில் ஆரம்ப வைப்பு தொகையாக 1,000 ரூபாய் பணத்தை செலுத்தி ஏலத்தில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

இலங்கையின் 5 துறைமுகங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களிற்குச் சொந்தமான மீன்பிடிப் படகுகள் இன்று முதல் 5 இடங்களில் ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ளது.

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Semmani Manhole
இலங்கை

எழுமாறாக தோண்டப்பட்ட குழிகளிலும் எலும்புக்கூடுகள்!

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட 101 நாள் அகழ்வுப் பணிகளில் மொத்தம் 515 மனித...

Namal
இலங்கை

நாங்கள் மனித நேயத்துடன் மட்டுமே செயலாற்றுவோம் – நாமல்.

மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, மொட்டுக் கட்சியின் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும்...

Court order
இலங்கை

மீண்டும் நீதிமன்றுக்கு வந்த பவானி வீதி வழக்கு – நீதிமன்று வழங்கிய தீர்ப்பு !

தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பவானி வீதியை விடுவிப்பதற்குத் தடைபோடும் வகையில் பலாலி காவல்துறையினரின் சார்பில்...

Weaponsgdg
இலங்கை

கலவரத்தினை கட்டுப்படுத்த ஏற்பட்ட தாமதம் – சிறைகளில் உள்ள ஆயுத பற்றாக்குறைகள்

நாட்டில் உள்ள ஒன்பது சிறைச்சாலைகளில் பல்வேறு துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 2,327 தோட்டாக்கள் நீண்டகாலமாகப் பயன்படுத்த முடியாத...