university student union jaffna university
அரசியல்இலங்கைசெய்திகள்

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்துக்கு எதிராக மாணவர் புரட்சி வெடிக்கும்!!

Share

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்துக்கு எதிராக மாணவர் புரட்சி வெடிக்கும்!!

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் மாணவர் சமூகத்திற்கும் பாரதூரமானது தொடர்ச்சியாக இதனை நடைமுறைப்படுத்த ஆட்சியாளர்கள் முன் வந்தால் வடகிழக்கு தழுவிய ரீதியில் மாணவர்களின் மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்படும் என யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் அழகராசா விஜயகுமார் தெரிவித்தார்.

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய கேட்போர் கூட்டத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்..

தொடர்ச்சியாக தமிழ் மக்களுடைய பிரச்சனையானது இலங்கையிலே வடகிழக்கு மக்களுடைய அடக்கு முறையாக இடம் பெறுகிறது.

அந்த வகையிலே பயங்கரவாத தடைச் சட்டம் என்ற வகையில் 44 வருடமாக எங்களுடைய மக்களை அடக்கி ஒடுக்கிக் கொண்டிருந்த பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு மாறாக இப்பொழுது ஒரு சட்டமூலம் வந்திருக்கின்றது .

அந்த சட்டம் மூலம் எங்களை அடக்குவதற்கான சட்டமூலமே அதாவது ஒரு மனிதன் சுதந்திரமாக ஜனநாயக ரீதியாக தன்னுடைய கருத்தை தெரிவிப்பதற்கு எதிராக கடுமையாக இயற்றப்பட்ட சட்யமூலமாகவே இந்த சட்ட மூலம் காணப்படுகிறது.

மாணவர் சமூகத்தை பாரியளவில் இச் சட்டமூலம் பாதித்திருக்கிறது. எங்களுடைய மக்களின் குரல் இந்த பயங்கரவாத தடைச் சட்டம் மூலம் நசுக்கபடுகின்து.

மேலும் ஜனநாயக ரீதியாக போராடுகின்ற மாணவர்கள் கைது செய்து இதன் மூலம் அச்சுறுத்தப்படுகின்றார்கள். அந்த வகையிலே இந்த புதிதாக உருமாறி வரவிருக்கின்ற இந்த சட்டமூலத்தை சர்வதேசம் தலையிட்டு நிறுத்த வேண்டும்.

இலங்கை பாராளுமன்றத்திலே இந்த சட்டமூலமானது ஒரு நியாயப்படுத்தப்பட்ட சட்டம் மூலமாக பாராளுமன்ற உறுப்பினர்கள் இதற்கு ஆதரவு வழங்ககூடாது.

ஆகவே இதனை யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முற்றாக எதிர்கின்றது. தொடர்சியாக இவ் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மீதான நகர்வுகள் அதனை நடைமுறைபடுத்த முன்னெடுக்கப்படுமானால் வடகிழக்கு தழுவிய ரீதியில் பாரிய ஆர்ப்பாட்டம் பல்கலைக்கழக மாணவர்களாக முன்னெடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார் .

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...