அரசியல்இலங்கைசெய்திகள்

வலுக்கும் உட்கட்சி மோதல்! – எப்போதும் நானே தலைவர் என்கிறார் ராஜலிங்கம்

20220410 131052 scaled
Share

தமிழர் விடுதலைக் கூட்டணியின் பிரச்சினை முடிவுக்கு வந்தது என ஆனந்தசங்கரி கூறுகின்றார். ஆனால் கட்சியின் பிரச்சனை தற்போதே ஆரம்பித்துள்ளது என அக்கட்சியின் தம்பையா ராஜலிங்கம் தெரிவித்தார்.

இன்றைய தினம் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நேற்றைய தினம் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் என்று தன்னை விளம்பரப்படுத்திக் கொண்டு இருக்கின்ற ஆனந்தசங்கரி மத்திய செயற்குழு கூட்டத்தை கூட்டி இருந்தார்.

நான் தான் அந்த கட்சியினுடைய தலைவர். அதில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கூட்டத்தை கூட்டுவதாக இருந்தால் முதலிலேயே தலைவருடன் கலந்தாலோசிக்க வேண்டும்.

என்னுடன் கலந்தாலோசிக்காமல் கூட்டத்தை நடத்தினால் யாப்புக்கு முரணானது.

இப்போது கட்சிப் பிரச்சனை முடிவுக்கு வந்தது என ஆனந்தசங்கரி கூறுகின்றார்.ஆனால் கட்சியின் பிரச்சனை தற்போதே ஆரம்பித்துள்ளது. தலைவராக தெரிவு செய்யப்பட்டவர் மத்தியகுழு உறுப்பினர் அல்ல. அவர் பொதுச் சபை உறுப்பினர். மத்திய செயற்குழுவில் இல்லாத ஒருவர் அழைக்கப்பட்டு தலைவராக தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்.

நேற்றைய கூட்டம் தேர்தல் திணைக்களத்தால் ரத்து செய்ய செய்யப்படும் என்பதில் திடகாத்திரமான நம்பிக்கை கொண்டுள்ளோம். இது சம்பந்தமாக உடனடியாக நாங்கள் தேர்தல் திணைக்களத்திற்கு அறிவித்து நடவடிக்கை எடுக்க இருக்கிறோம்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அன்றும் இன்றும் நானே – என்றார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...