sajith
அரசியல்இலங்கைசெய்திகள்

இராஜாங்க அமைச்சரவை நியமனம்! – எதிர்க்கட்சி எதிர்ப்பு

Share

அதிக எண்ணிக்கையிலான இராஜாங்க அமைச்சரவையை ஜனாதிபதி நியமித்தமைக்கு எதிராக சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழுக் கூட்டத்தில் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இது தொடர்ப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“நாடு மிகவும் பாரதூரமான முறையில் வங்குரோத்தடைந்துள்ள நேரத்தில், வாழ்க்கைச் செலவு அதிகரித்துப்போன நேரத்தில், அரசால் தன்னிச்சையாகவும், நெறிமுறையற்றதுமாக இராஜாங்க அமைச்சர்கள் 37 பேரளவில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்தப் பெரும் எண்ணிக்கையிலான இராஜாங்க அமைச்சர்களை நியமிப்பது இத்தருணத்தில் நாட்டுக்கு ஏற்றுக்கொள்ள முடியாது என்பதோடு, அது மேலும் இந்த நாட்டை அதலபாதாளத்துக்குத் தள்ளும் என்று ஐக்கிய மக்கள் சக்தி உறுதியாக நம்புகின்றது.

இந்த வீணான நிலைமைக்கு எதிரான மக்களின் எதிர்ப்புப் போலவே குடிமக்கள் போராட்டத்தின் நோக்கங்களை மீறி இந்த மிகப் பெரிய இராஜாங்க அமைச்சரவையை நியமித்ததன் மூலம் அரசு பழைய வழமையான பாதையில் பயணிக்கின்றது என்பதையே மறைமுகமாக உணர்த்துகின்றது.

இதன் பிரகாரம், இந்தப் பாரிய இராஜாங்க அமைச்சரவையை ஜனாதிபதி நியமித்தமைக்கு எதிராக நேற்றுக் கூடிய ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழுக் கூட்டத்தில் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது” – என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
dead body
இலங்கை

பாடசாலை செல்லும்போது ஆறு வயது பாலகிக்கு நேர்ந்த கதி.

இன்று, மாத்தறை, திக்வெல்ல – கொடஉட பகுதியில் 6 வயது சிறுமி ஒருவர் தனது தாயார்...

Lanka Turkey
இலங்கை

துருக்கித் தூதுவரை சந்தித்த சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவர்.

சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர மற்றும் சர்வஜன அதிகார கட்சியின்...

Fire Breaks Out Factory In Katuwana
இலங்கை

அடையாளம் காணப்பட முடியாத வகையில் உடலங்கள் – ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்தில் தீ.

ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தலைக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்கள்...

Basil Rajapaksa
இலங்கை

கடும் எச்சரிக்கையுடன் பசில் ராஜபக்சவுக்கு மீண்டும் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை.

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிராக, மாத்தறை எளியகந்த பகுதியில் உள்ள ஒன்றரை...