24 66038c9ad02a0
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பாலம் அமைக்க நடவடிக்கை

Share

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பாலம் அமைக்க நடவடிக்கை

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பாலம் அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.

இந்த பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும் நோக்கில் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி சாகல ரட்நாயக்க இன்று இந்தியா விஜயம் செய்ய உள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையில் தரைவழித் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வது குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நாளைய தினம் இது குறித்து புதுடெல்லியில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

போக்குவரத்து, சுற்றாடல் அமைச்சுக்களின் செயலாளர்கள், தொடருந்து திணைக்களப் பொது முகாமையாளர், சுங்கத் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்டவர்களும் இந்த விஜயத்தில் இணைந்து கொள்ள உள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையில் பாலம் அமைப்பது குறித்து நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
அகில விராஜ் காரியவசம் 3
இலங்கை

காரியவசம் வெளியிட்டுள்ள சர்ச்சைக்குரிய கருத்து – நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர், சட்டத்தரணி சாகர காரியவசாத்தினால், பொலிஸ் மா அதிபர் தொடர்பில்...

சுரேஷ் சலே
இலங்கை

சுரேஷ் சலேவினால் தாக்கல் தாக்கல் செய்யப்பட்ட இடையீட்டு மனுக்கள் பரிசீலனைக்கு!

ஈஸ்டர் தினத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய, தன்னை குற்றப் புலனாய்வுத்...

திருட்டு
இலங்கை

விசேஷ வீட்டில் திருட்டு – யாழில் இடம்பெற்ற அதிர்ச்சி சம்பவம்.

யாழ்ப்பாணம் – கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் தெற்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றில், தாலிக்கொடி...

விகாரை
இலங்கை

விகாரையால் ஆக்கிரமிக்கப்பட்ட வீதி தொடர்பில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு.

தையிட்டி திஸ்ஸ விகாரையால் ஆக்கிரமிக்கப்பட்ட பவானி வீதி விடுவிப்புக்கு எதிராக வலிவடக்கு பிரதேச சபைக்கு எதிராக...