தையிட்டி திஸ்ஸ விகாரையால் ஆக்கிரமிக்கப்பட்ட பவானி வீதி விடுவிப்புக்கு எதிராக வலிவடக்கு பிரதேச சபைக்கு எதிராக காவல்துறையினர் தொடர்ந்த வழக்கு மல்லாகம் நீதிமன்றால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
மேலும், வலி.வடக்கு பிரதேசசபைத் தவிசாளர் சுகிர்தன் , செயலாளரும் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதுடன், தவிசாளர் சார்பில் சட்டத்தரணி சுமந்திரன் முன்னிலையாகி வாதங்களை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.