இலங்கை
வலுக்கும் கச்சத்தீவு விவகாரம்: ஜீவன் தொண்டமான் பதிலடி
வலுக்கும் கச்சத்தீவு விவகாரம்: ஜீவன் தொண்டமான் பதிலடி
கச்சத்தீவை (Katchatheevu) இந்தியா (India) திருப்பி தருமாறு கோரிக்கை விடுத்தால், அதற்கு இலங்கை வெளியுறவுத் துறை தகுந்த பதில் அளிக்கும் என தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமான் (Jeevan Thondaman) தெரிவித்துள்ளார்.
கச்சத்தீவு விவகாரம் தற்போது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதோடு இது இந்திய மக்களவைத் தேர்தலிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பாஜக (BJP) மாநில தலைவர் அண்ணாமலை (Annamalai) மற்றும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் கச்சத்தீவு விவகாரத்தில் திமுக (DMK) மற்றும் காங்கிரஸ் (Congress) அரசை கடுமையாக சாடி வருகின்றனர்.
இந்நிலையிலேயே, அவர்களுக்கு பதிலடி அளிக்கும் வகையில் ஜீவன் தொண்டமான் தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.
அத்துடன், கச்சத்தீவு விவகாரம் குறித்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலையும் இந்தியா வழங்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், கச்சத்தீவு தற்போது இலங்கையின் கட்டுப்பாட்டிலேயே இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.