மதுபானம் அருந்துவிட்டு பாடசாலைக்கு வந்த மாணவியால் குழப்ப நிலை
இலங்கைசெய்திகள்

மதுபானம் அருந்துவிட்டு பாடசாலைக்கு வந்த மாணவியால் குழப்ப நிலை

Share

மதுபானம் அருந்துவிட்டு பாடசாலைக்கு வந்த மாணவியால் குழப்ப நிலை

கெக்கிராவ பிரதேசத்தில் பியர் அருந்திவிட்டு பாடசாலைக்கு வந்த 14 வயதுடைய பாடசாலை மாணவியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கெக்கிராவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கெக்கிராவ கல்வி வலயத்திற்குட்பட்ட கல்லூரி ஒன்றிற்கு முன்பாக பிரதான வீதியில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த கெக்கிராவ பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் குறித்த மாணவி மீது சந்தேகம் அடைந்து மாணவியை தங்கள் பொறுப்பில் எடுத்தனர்.

பின்னர், குறித்த மாணவி கெக்கிராவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.ஓ.பி.சுமித் முனசிங்கவிடம் அழைத்து வந்து ஒப்படைத்த பின்னர், மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த மாணவி எப்படி மது அருந்தினார் என்பது குறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணைகளின் போது, ​​சிறுமியின் தாயின் இரண்டாவது கணவனின் தந்தை தனக்கு பியர் குடிக்க கற்றுக் கொடுத்ததாக சிறுமி கூறியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கெக்கிராவ பொலிஸார், கெக்கிராவ நீதவான் நீதிமன்றத்தின் நன்னடத்தை அலுவலகத்திற்கு அறிவித்ததையடுத்து, சம்பவம் தொடர்பில் தனியான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கமைய, குறித்த மாணவி கல்வி கற்கும் பாடசாலை அதிபரிடம் வாக்குமூலம் பெறுவதற்காக சிரேஷ்ட நன்னடத்தை உத்தியோகத்தர் கருணா கீர்த்திரத்ன தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட போது, ​​அதிபர் தொலைபேசியை துண்டித்துள்ளார்.

பின்னர் குறித்த உத்தியோகத்தர் கெக்கிராவ பிராந்திய கல்விப் பணிப்பாளரிடம் முறைப்பாடு செய்து, குறித்த அதிபர் சிறுமி தொடர்பான விசாரணைகளுக்கு ஆதரவளிக்கவில்லை எனவும் விசாரணைக்கு இடையூறு விளைவிப்பதாகவும் தெரிவித்தார்.

சிறுமி பியர் குடித்து பாடசாலைக்கு வந்தது ஏன், அவரை பியர் குடிக்க வைத்தது யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

கெக்கிராவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சுமித் முனசிங்கவின் பணிப்புரைக்கமைய பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Semmani Manhole
இலங்கை

எழுமாறாக தோண்டப்பட்ட குழிகளிலும் எலும்புக்கூடுகள்!

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட 101 நாள் அகழ்வுப் பணிகளில் மொத்தம் 515 மனித...

Namal
இலங்கை

நாங்கள் மனித நேயத்துடன் மட்டுமே செயலாற்றுவோம் – நாமல்.

மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, மொட்டுக் கட்சியின் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும்...

Court order
இலங்கை

மீண்டும் நீதிமன்றுக்கு வந்த பவானி வீதி வழக்கு – நீதிமன்று வழங்கிய தீர்ப்பு !

தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பவானி வீதியை விடுவிப்பதற்குத் தடைபோடும் வகையில் பலாலி காவல்துறையினரின் சார்பில்...

Weaponsgdg
இலங்கை

கலவரத்தினை கட்டுப்படுத்த ஏற்பட்ட தாமதம் – சிறைகளில் உள்ள ஆயுத பற்றாக்குறைகள்

நாட்டில் உள்ள ஒன்பது சிறைச்சாலைகளில் பல்வேறு துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 2,327 தோட்டாக்கள் நீண்டகாலமாகப் பயன்படுத்த முடியாத...