புலம்பெயர் தமிழர்களிடம் பொன்சேகா கோரிக்கை
இலங்கைசெய்திகள்

புலம்பெயர் தமிழர்களிடம் பொன்சேகா கோரிக்கை

Share

புலம்பெயர் தமிழர்களிடம் பொன்சேகா கோரிக்கை

விடுதலைப் புலிகளின் தலைவரின் குடும்பத்தை வைத்து அரசியல் செய்வதை உடனடியாக நிறுத்துமாறு புலம்பெயர் தமிழர்களிடம் முன்னாள் இராணுவத் தளபதியும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கேட்டுக்கொண்டுள்ளார்.

விடுதலைப் புலிகளின் தலைவரின் மனைவி மதிவதனி மற்றும் மகள் துவாரகா ஆகியோர் உயிருடன் இருக்கின்றனர் எனவும், அவர்களை, தான் நேரில் சந்தித்ததாகவும் வெளிநாடொன்றில் வசிக்கும் மதிவதனியின் சகோதரி ஒருவர் சமூகவலைத்தளங்களில் காணொளி ஒன்றை அண்மையில் வெளியிட்டிருந்தார். தற்போது அந்த காணொளி வைரலாகியுள்ளது.

இந்நிலையிலேயே முன்னாள் இராணுவத் தளபதியான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், “இறுதிப் போரில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனும், அவரின் மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளும் உயிரிழந்துவிட்டனர். இது அனைவரும் அறிந்த உண்மை.

இந்நிலையில், விடுதலைப் புலிகளின் தலைவர் உயிருடன் இருக்கின்றார் என்று ஒரு குழுவினரும், அவருடைய மனைவி மற்றும் மகள் உயிருடன் இருக்கின்றனர் என்று இன்னொரு குழுவினரும் தமது சுயலாப அரசியலுக்காகப் பிரசாரம் செய்து வருகின்றனர்.

புலம்பெயர் தமிழர்களே இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களிடம் நாம் விநயமாகக் கேட்டுக்கொள்வது என்னவெனில், உங்கள் சுயலாபத்திற்காக உயிரிழந்த விடுதலைப் புலிகளின் தலைவரின் குடும்பத்தை வைத்து அரசியல் செய்வதை உடனடியாக நிறுத்துங்கள் என தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
prison
இலங்கை

கட்டுப்பாட்டிற்குள் வந்த பதற்ற நிலை – வெளியேறிய தீயணைப்பு வாகனங்கள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அனைத்துக் கைதிகளையும் தற்போது அவர்களது சிறைக்...

Scammers
இலங்கை

அமைச்சரின் பெயரில் இடம்பெறும் பாரிய மோசடி.

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க பிரதி அமைச்சரை போல் ஆள்மாறாட்டம்...

Featured
இலங்கை

மஹர சிறையில் தற்போதைய நிலை .

ராகம பொலிஸ் எல்லைக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சுற்றியுள்ள A, 246/கண்டலியத்த பாலுவ – மேற்கு, 246/C...

Mahara Prison
இலங்கை

மஹர சிறைச்சாலையில் ஒருவர் பலி – பலர் படுகாயம்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலைமையின் போது காயமடைந்தவர்களில் ஒருவர் பலியாகியுள்ளதுடன், மேலும் காயமடைந்த 6...