இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்
அரசியல்இலங்கைசெய்திகள்

போராட்டத்தைச் சீர்குலைக்க முயன்றால் பாரதூரமான விளைவுகள் ஏற்படும்! – சட்டத்தரணிகள் சங்கம் எச்சரிக்கை

Share

“மக்களின் அமைதியான போராட்டத்தைச் சீர்குலைக்கும் அரசின் முயற்சி நாட்டுக்குப் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும்.”

– இவ்வாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி காலிமுகத்திடலில் ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு இன்று 8 ஆவது நாளாகவும் போராட்டம் தொடர்கின்றது. இந்நிலையில், காலிமுகத்திடல் பகுதியில் இன்று காலை திடீரென பொலிஸ் கனரக வாகனங்கள் குவிக்கப்பட்டிருந்தன. அங்கு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது.

இதையடுத்து இந்தச் சம்பவத்தை அறிக்கை மூலம் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கண்டித்துள்ளது.

கடுமையான கண்டனங்கள் எழுந்ததையடுத்து பொலிஸ் கனரக வாகனங்கள் அங்கிருந்து முழுமையாக அகற்றப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
exam hall 1
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எப்போது வெளியாகும்?

ஒரு மாத காலத்திற்குள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர்...

arested 1
இலங்கை

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கிய உறுப்பினர் போதைப்பொருள் கடத்தியமையினால் கைது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொலன்னறுவை, மெதிரிகிரிய தேர்தல் தொகுதி தலைவரும் அவரது மனைவியும், ஐஸ் மற்றும் ஹெரோயின்...

போலி நாணயத்தாள்
இலங்கை

தமிழர் பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது!

கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக இரு போலி நாணயத்தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்கள்...

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு
இலங்கை

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு!

நாவலப்பிட்டி தொகுதியின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைப்பாளர் கே.எல்.ஏ. குணசிங்க உள்ளிட்ட தொகுதிப் பிரதிநிதிகள்...