IMG 20220619 WA0166
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வழிப்பறி கொள்ளை! – இருவர் மடக்கிப் பிடிப்பு

Share

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதான வீதியில் அச்சுவேலி – வல்லைப்பகுதியில் , வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்கள் பொதுமக்களினால் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது.

இறைச்சி வியாபாரி ஒருவரின் 3 லட்சம் ரூபா பணத்தை கொள்ளையிட்ட நபர்களே இவ்வாறு நையப்புடைக்கப்பட்டு பின்னர் அச்சுவேலி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

புத்தூர் பகுதியில் வைத்து வியாபாரம் செய்யும் வியாபாரி ஒருவர், வல்லை பகுதியூடாக வீட்டுக்கு சென்றுள்ளார். இதன்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 இளைஞர்கள் கத்தி முனையில் வியாபாரியை அச்சுறுத்தி அவரிடமிருந்த 3 லட்சம் ரூபா பணத்தினை கொள்ளை அடித்துள்ளனர்.

சாமர்த்தியமாக செயற்பட்ட இறைச்சி வியாபாரி ஒரு இளைஞனை துரத்திப் பிடித்து நையப்புடைத்தார். பின்னர் குறித்த பிரதான வீதியில் பயணித்த நபர்களும் பிடிபட்ட இளைஞனை முறையாக கவனித்தனர்.

தப்பிச்சென்ற இன்னொரு இளைஞன் நாவல் காட்டு பகுதியில் உள்ள கோயில் கேணியில் கால் கழுவிக் கொண்டிருந்த போது கையும் மெய்யுமாக அப்போது இளைஞர்களினால் பிடிக்கப்பட்டார்.

இதன்போது குறித்த இளைஞனின் மர்ம உறுப்பு பகுதியில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம் கைப்பற்றப்பட்டது.

இவ்வாறு வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட இளைஞர்கள் இருவரும் யாழ்ப்பாணம் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டது

வீதியில் வைத்து இளைஞர்கள் முறையாக கவனிக்கப்பட்ட பின்னர் அச்சுவேலி பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் இளைஞர்கள் இருவரையும் கைதுசெய்து பொலிஸ் நிலையம் கொண்டு சென்றனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
dead body
இலங்கை

பாடசாலை செல்லும்போது ஆறு வயது பாலகிக்கு நேர்ந்த கதி.

இன்று, மாத்தறை, திக்வெல்ல – கொடஉட பகுதியில் 6 வயது சிறுமி ஒருவர் தனது தாயார்...

Lanka Turkey
இலங்கை

துருக்கித் தூதுவரை சந்தித்த சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவர்.

சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர மற்றும் சர்வஜன அதிகார கட்சியின்...

Fire Breaks Out Factory In Katuwana
இலங்கை

அடையாளம் காணப்பட முடியாத வகையில் உடலங்கள் – ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்தில் தீ.

ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தலைக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்கள்...

Basil Rajapaksa
இலங்கை

கடும் எச்சரிக்கையுடன் பசில் ராஜபக்சவுக்கு மீண்டும் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை.

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிராக, மாத்தறை எளியகந்த பகுதியில் உள்ள ஒன்றரை...