202104050046437788 137 people arrested for alcoholism SECVPF
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பல்கலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை! – இருவர் கைது

Share

அம்பாறை ஒலுவில் பிரதேசத்தில் பல்கலைக்களக மாணவர்களுக்கு போதைப்பொருள் விநியோகித்து வந்த வியாபாரியின் வீட்டை நேற்று (18) மாலையில் முற்றுகையிட்ட பொலிஸார் அங்கிருந்து கஞ்சா தூள் மற்றும் மாவா என்ற போதை பொருள் பெருமளவில் மீட்டதுடன் 41 வயதுடைய போதைப்பொருள் வியாபாரியை கைது செய்துள்ளனர்.

அக்கரைப்பற்று பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கமைய சம்பவதினமான நேற்று மாலை 5 மணிக்கு ஒலுவில் பிரதேசத்திலுள்ள போதை பொருள் வியாபாரியின் வீட்டை முற்றுகையிட்டனர்.

இதன்போது அங்கு வியாபாத்தில் ஈடுபட்டிருந்த 41 வயதுடைய வியாபாரியை கைது செய்ததுடன் கஞ்சா மற்றும் புகையிலை கலந்து 300 கிராம் தூள், மாவா என்றழைக்கப்படும் 1 அரை கிலோ போதைப்பொருள் மற்றும் கஞ்சாவை புகைப்பதற்காக பயன்படுத்தப்படும் ஒ.சி.பி. என்ற பொருள் 30 பெட்டி என்பவற்றை மீட்டுள்ளனர்.

இதில் கைது செய்யப்பட்ட வியாபாரி இந்த போதைப்பொருளை நீண்ட காலமாக அந்த பகுதியிலுள்ள பல்கலைக்கழகத்தில் கற்றுவரும் மாணவர்களுக்கு வியாபாரம் செய்து வந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதுடன் இவரை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
பூசா சிறைச்சாலை
இலங்கை

மஹர சிறைச்சாலையில் இருந்து இடம்மாற்றப்பட்ட கைதிகள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தினை அடுத்து, அங்கிருந்து 20 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச்...

prison
இலங்கை

கட்டுப்பாட்டிற்குள் வந்த பதற்ற நிலை – வெளியேறிய தீயணைப்பு வாகனங்கள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அனைத்துக் கைதிகளையும் தற்போது அவர்களது சிறைக்...

Scammers
இலங்கை

அமைச்சரின் பெயரில் இடம்பெறும் பாரிய மோசடி.

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க பிரதி அமைச்சரை போல் ஆள்மாறாட்டம்...

Featured
இலங்கை

மஹர சிறையில் தற்போதைய நிலை .

ராகம பொலிஸ் எல்லைக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சுற்றியுள்ள A, 246/கண்டலியத்த பாலுவ – மேற்கு, 246/C...