Sajith Vavuniya
இலங்கைஅரசியல்செய்திகள்பிராந்தியம்

வடக்கில் சஜித்!

Share

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாசவின் வடமாகாண பயணம் இன்று ஆரம்பமானது.

வடமாகாணத்துக்கான பயணத்தை இன்று ஆரம்பித்துள்ள சஜித் பிரேமதாச முதலாவதாக வவுனியா மாவட்டத்துக்கு வந்துள்ளார்.

அரசியல், சமூக மற்றும் ஆன்மீக நிகழ்வுகளில் பங்கேற்ற பின்னர் ஊடக சந்திப்பொன்றையும் நடத்தவுள்ளார்.

மறுநாள் 08 ஆம் திகதி மன்னார் வருகின்றார். மடுதேவாலயம், திருக்கேதீஸ்வரம் ஆகிய புனித தலங்களுக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபடவுள்ளார். மன்னார் ஆயரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

ஜனவரி 09 ஆம் திகதி யாழ்ப்பாணம் வரவுள்ளார். காலை 8.30 மணிக்கு ஊடக சந்திப்பு இடம்பெறவுள்ளது. அதன்பின்னர் நயினாதீவு செல்லவுள்ளார். நயினா தீவு விகாரை மற்றும் கோவிலில் வழிபாடுகளில் ஈடுபடவுள்ளார்.

அமரர். ராஜமஹேந்திரனின் நினைவாக தெல்லிப்பளை தள மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கிவைக்கப்படவுள்ளது.

மாலை 3.30 மணிக்கு திருநகரில் அரசியல் கூட்டமொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மானிப்பாய் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் கிரிக்கெட் போட்டி தொடரிலும் மாலை 5 மணிக்கு பங்கேற்பார்.

யாழ். வியாபார சமூகத்துடனான சந்திப்பு இரவு 7 மணிக்கு யூஎஸ் ஹேட்டலில் இடம்பெறவுள்ளது. 10 ஆம் திகதி கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு
பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

11 ஆம் திகதி மீண்டும் யாழ். வருவார். தொழில் வல்லுநர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்களை சந்திக்கவுள்ளார். 12 ஆம் திகதியும் முக்கிய சந்திப்புகள் இடம்பெறவுளளன. யாழ். ஆயரை அன்றைய தினம் சந்திப்பார். நல்லூர் கோவிலுக்கும் செல்வார்.

வவுனியா மாவட்ட தேசிய வைத்தியசாலைக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாசவினால்  இரத்த சுத்திகரிப்பு தொகுதி கையளிக்கப்பட்டது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Elephant Tusks 1
இலங்கை

யானைத்தந்தங்களுடன் நிலவெளியில் ஒருவர் கைது.

  சட்டவிரோதமான முறையில் யானைத் தந்தங்களை வீட்டில் வைத்திருந்த நபரொருவர் திருகோணமலை- நிலாவெளி பகுதியில் விசேட...

low r 1
இலங்கை

உயர்தர பரீட்சையை ஒத்தி வைக்க கோரிய மனு மீதான உத்தரவு.

எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைத்து உத்தரவிடுமாறு கல்விப் பொதுத்...

are 2 1
இலங்கை

அயலவரை அடித்துக்கொன்ற சந்தேக நபர் கைது.

கடந்த 14ஆம் திகதி இரவு தம்புள்ளை விகாரை சந்தியில் அமைந்துள்ள கடை அறைகளில் தற்காலிகமாக வசித்து...

யோஷித ராஜபக்ஷ
இலங்கை

யோஷித ராஜபக்ஷவிற்கு எதிரான வழக்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்ஸி ஃபொரஸ்ட்...