Parliament SL 2 1 1000x600 1
அரசியல்இலங்கைசெய்திகள்

திருத்தங்களுடனான 21 வதுதிருத்தச் சட்ட வரைபு நாளை அமைச்சரவையில்!

Share

திருத்தங்களுடனான முழுமையான 21 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூல வரைபு நாளை திங்கட்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

உத்தேச 21ஆவது திருத்தச் சட்டமூலத்தில், இரட்டைக் குடியுரிமை விவகாரம், பிரதமரை பதவி நீக்கும் விடயம், அமைச்சின் விடயதானங்கள், ஜனாதிபதி அமைச்சுப் பதவியை வகித்தல் உள்ளிட்ட நான்கு பிரதான விடயங்கள் குறித்தும் ஒருமித்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

அதற்கமைய திருத்தங்களுடனான முழுமையாக திருத்தச்சட்டமூல வரைபு நாளை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு ஓரிரு வாரங்களில் வர்த்தமானியில் வெளியிடவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற கட்சித் தலைவர் கூட்டத்தில் 21ஆவது திருத்தம் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

பூரணமற்ற வகையில் இந்த திருத்தத்தை கொண்டு வராமல் தமிழர் பிரச்சினை உள்ளிட்ட அடிப்படை பிரச்சினைகளுக்குத் தீர்வை உள்ளடக்கிய வகையில் திருத்தம் கொண்டுவர வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

19ஆவது திருத்தத்திலுள்ள அடிப்படை விடயங்கள் உள்வாங்கப்படவில்லையென ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இதன் போது சுட்டிக்காட்டினார்.

இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த 21ஆவது திருத்த யோசனை தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை கருத்திற்கொள்ளவும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
anura kumara dissanayake 1
இலங்கை

பதவி குறித்து கவலை இல்லை – அநுர!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நாட்டின் அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டு தனது அதிகாரத்தை பயன்படுத்தப் போவதில்லை என...

சுரேஷ் சலேbyjtujtu
இலங்கை

சுரேஷ் சலேவை மயக்க நிலையில் வைத்து தீவிர விசாரணைக்கு உட்படுத்த முயற்சி!

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலனாய்வுத் தலைவர் சுரேஷ் சலே பரிசோதனைக்கு...

குழந்தையினை கைவிட்டு
இலங்கை

குழந்தையினை கைவிட்டு தப்பியோடிய தாய் – தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ள காவல்துறையினர்.

கண்டி – வத்தேகம நகரில் தனது நான்கு வயது குழந்தையை முச்சக்கர வண்டியில் வந்த தாயொருவர்...

Featured mm
இலங்கை

பெக்கோ சமன் தாயார் படுகொலை – பின்னணியில் பழிவாங்கும் படலம்!

பூஸா அதிஉயர் பாதுகாப்புச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெக்கோ சமன் என்ற நிர்மல பிரசங்க என்பவரின்...