23 10
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு சுற்றுலா வந்த ரஷ்ய குடும்பத்தை அள்ளிச் சென்ற கடல் அலை

Share

இலங்கைக்கு சுற்றுலா வந்த ரஷ்ய குடும்பத்தை அள்ளிச் சென்ற கடல் அலை

இலங்கைக்கு(sri lanka) சுற்றுலா வந்த ரஷ்ய குடும்பம் நீராடச் சென்ற நிலையில் கடல் அலை இழுத்துச் சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ரஷ்யாவைச்(russia) சேர்ந்த 40 வயதுடைய ஆண் ஒருவரும் அவருடைய 39 வயதுடைய மனைவி மற்றும் 07 மற்றும் 13 வயதுடைய இரு பெண் பிள்ளைகள் இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ளனர்.

இவ்வாறு வந்த இவர்கள் ஹிக்கடுவை கடற்கரையில் நீராடச் சென்றுள்ளனர்.இதன்போது அவர்கள் நால்வரையும் கடல் அலை இழுத்துச் சென்றுள்ளது.

எனினும் அங்கு கடமையில் இருந்த ஹிக்கடுவை காவல்துறை உயிர்காப்பு பிரிவு அதிகாரிகள் உடனடியாக செயற்பட்டு குறித்த நால்வரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஹிக்கடுவை காவல் நிலையத்திற்குட்பட்ட காவல்துறை உயிர்காப்பு பிரிவின் காவல்துறை பரிசோதகர் ஹேவகே, காவல்துறை கான்ஸ்டபிள் 96793 ஏக்கநாயக்க, காவல்துறை கான்ஸ்டபிள் 102748 திஸாநாயக்க மற்றும் காவல்துறை கான்ஸ்டபிள் 105456 ஜயசிங்க ஆகியோரால் இவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
anura kumara 1
இலங்கை

பிரதேச செயலகங்களில் இடம்பெற்றுள்ள நிதி முறைகேடுகள் – ஜனாதிபதியின் அதிரடி முடிவு!

  நுவரெலியா மாவட்டத்தின் பிரதேச செயலகங்களில் இடம்பெற்றுள்ள நிதி முறைகேடுகள் குறித்து கண்டறிவதற்காக ஜனாதிபதி அநுர...

arested 3
இலங்கை

ACMC கடசியின் உப தவிசாளர் உட்பட ஐவர் போதைப்பொருளுடன் கைது.

ஹெரோயின் போதைப்பொருளுடன் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் உப தவிசாளர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர்...

death body 2
இலங்கை

கடற்கரைப் பகுதியில் மீட்கப்பட்ட சடலம்!

காலி முகத்திடலுக்கு அருகில் உள்ள கடற்கரைப் பகுதியில் இருந்து நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவரின்...

கெமுனு விஜேரத்ன
இலங்கை

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்த கெமுனு விஜேரத்ன !

தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் சமூக வலைத்தளங்கள்...