சீனாவால் 1000 மெட்ரிக் தொன் அரிசி வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த அரிசி இலங்கை மாணவர்களுக்கு வழங்குவதற்காக கல்வி அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என இலங்கைக்கான சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.
மேலும், 7,900 பாடசாலைகளில் உள்ள 1.1 மில்லியன் மாணவர்களுக்கு ஆறு மாத காலத்திற்கு தேவையான அரிசி வழங்கப்பட்டுள்ளது. அடுத்த வாரமளவில் மேலும் இரண்டு அரிசி இருப்புக்கள் வழங்கப்படவுள்ளன என சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, பாடசாலை மாணவர்களுக்கான சீருடை வழங்குவது தொடர்பில் கல்வி அமைச்சுடன் கலந்துரையாடி வருவதாகவும் இலங்கைக்கான சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.
#SriLankaNews
Leave a comment