Yala 2Y0A7061 September 05 2020 2 Riaz Cader
இலங்கைசெய்திகள்

சுற்றுலாவிகளுக்கு யால பூங்காவில் இளைப்பாறும் இடம்!

Share

யால தேசிய பூங்காவிற்கு வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பகல் வேளையில் ஓய்வெடுப்பதற்காக தனியான இளைப்பாறும் இடம் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வன விலங்குகள் மற்றும் தாவரங்களுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் இந்த ஓய்விடத்தை நிர்மாணிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும் சுற்றுலாப் பயணிகளுக்கு உணவு மற்றும் பானங்கள் என்பனவும் இங்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக அறியமுடிகிறது.

சுற்றுலாப் பயணிகளுக்கு வன விலங்குகள் மற்றும் தாவரங்கள் பற்றிய தகவல்களை வழங்குவதற்கான நிகழ்ச்சி நிரல்களும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதற்காக வனஜீவராசிகள் திணைக்களத்தினால் செலவிடப்பட உத்தேசிக்கப்பட்டுள்ள தொகை 56 மில்லியன் ரூபாவாகும்.

இங்கு சுமார் 200 வாகனங்களை நிறுத்துவதற்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
பூசா சிறைச்சாலை
இலங்கை

மஹர சிறைச்சாலையில் இருந்து இடம்மாற்றப்பட்ட கைதிகள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தினை அடுத்து, அங்கிருந்து 20 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச்...

prison
இலங்கை

கட்டுப்பாட்டிற்குள் வந்த பதற்ற நிலை – வெளியேறிய தீயணைப்பு வாகனங்கள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அனைத்துக் கைதிகளையும் தற்போது அவர்களது சிறைக்...

Scammers
இலங்கை

அமைச்சரின் பெயரில் இடம்பெறும் பாரிய மோசடி.

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க பிரதி அமைச்சரை போல் ஆள்மாறாட்டம்...

Featured
இலங்கை

மஹர சிறையில் தற்போதைய நிலை .

ராகம பொலிஸ் எல்லைக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சுற்றியுள்ள A, 246/கண்டலியத்த பாலுவ – மேற்கு, 246/C...