வடக்கு, கிழக்கு மற்றும் மலையக இலங்கை தமிழர்களுக்கு உதவ வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய தமிழக முதலமைச்சர்,
இலங்கை தற்போது பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள நிலையில், இந்த நெருக்கடியில் தைலர்களும் சிக்கியுள்ளனர். இவ்வாறு பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள வடக்கு, கிழக்கு மற்றும் மலையக இலங்கை தமிழர்களுக்கு அரிசி, பருப்பு மற்றும் உயிர்காக்கும் மருந்துகளை கப்பல் மூலம் அனுப்புவதற்கு நாம் தயாராக உள்ளோம் – என்று தெரிவித்துள்ளார்.
மக்களுக்குத் தேவையான பொருட்களை கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய தூதரகம் மூலம் விநியோகிக்க உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ள முதலமைச்சர், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
#SriLankaNews
Leave a comment