24 661621f15c05a
இலங்கைசெய்திகள்

அரசாங்க உறுப்பினர்களுக்கு ரணில் பணிப்புரை

Share

அரசாங்க உறுப்பினர்களுக்கு ரணில் பணிப்புரை

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக, அரசியல் பணிகளை மேற்கொள்வதற்கு, பிரசன்னம் தேவைப்படுவதால், வெளிநாட்டுப் பயணங்களை முடிந்தவரை கட்டுப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசாங்க உறுப்பினர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

மே தினக் கூட்டத்தின் பின்னர் தேர்தலை கருத்திற் கொண்டு அரசியல் பணிகளை முடுக்கிவிட ஜனாதிபதி தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி திட்டமிட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலை நேரடியாக இலக்காகக் கொண்டு அரசியல் வேலைகளைத் தொடங்குவதற்கான ஊஞ்சல் பலகையாக இந்த ஆண்டு பேரணியை மிகப் பெரிய அளவில் நடத்த ஐக்கிய தேசியக்கட்சி திட்டமிட்டுள்ளது.

தற்போது, நாடு முழுவதும் தொழில்முறை குழுக்களுடன் கூட்டங்களை நடத்தும் பணியில் அந்தக்கட்சி ஈடுபட்டுள்ளது.

இந்தநிலையில் பல்வேறு கட்சிகள் மற்றும் குழுக்கள் இணைந்து கொள்ளவுள்ள பரந்த கூட்டணியை பிரதிநிதித்துவப்படுத்தி தேர்தலில் பங்கேற்க ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
செம்மணியில் இன்றைய நாளிலும் 09 எலும்பு கூடுக
இலங்கை

செம்மணியில் இன்றைய நாளிலும் 09 எலும்பு கூடுகள் – மீட்கப்பட்ட சான்றுப்பொருட்கள்!

இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் 102ஆவது நாள் அகழ்வுப் பணிகள் தொடர்ச்சியாக...

மாளிகாவத்தையில் படுகொலை செய்யப்பட்ட கஞ்சிபானி இம்ரானின்
இலங்கை

கஞ்சிபானி இம்ரானின் மாமா படுகொலை – வெளியான பரபரப்பான CCTV காட்சிகள்!

மாளிகாவத்தையில் படுகொலை செய்யப்பட்ட கஞ்சிபானி இம்ரானின் மாமா என்பவரை துப்பாக்கியால் சுடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன....

5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சசையில் இடம்பெற்ற மோசடி – முறைப்பாடு அளித்துள்ள பெற்றோர்கள்!

நேற்றைய தினம் நடைபெற்ற 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தமது பிள்ளைகளுக்கு அநீதி இழைக்கப்பட்டதாகத் தெரிவித்து...

சாகர காரியவசம்
இலங்கை

நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டார் சாகர காரியவசம்.

நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசத்தினை பிணையில் விடுவிக்கக் கடுவலை நீதவான்...