3 8
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பேருந்துகளை தள்ளிக்கொண்டு வந்து பருத்தித்துறையில் போராட்டம்!

Share

யாழ்ப்பாணம் பருத்தித்துறை சாலை (டிப்போ) எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இரவு நேரங்களில் கள்ள சந்தையில் விற்பனை செய்வதற்கு டீசல் வழங்கப்படுவதாகவும் , தமக்கு உரிய ஒழுங்கில் வழங்கப்படுவதில்லை என தெரிவித்து தனியார் பேருந்து உரிமையாளர்கள் , சாரதிகள் , நடத்துனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பருத்தித்துறை பேருந்து நிலையத்தில் இருந்து இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை தமது பேருந்துகளை , பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்கு தள்ளிக்கொண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்துக்களுக்கும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டீசலை பெற்றுக்கொள்ள முடியும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஆனால் எமக்கு உரிய ஒழுங்குமுறைகளில் பருத்தித்துறை சாலை (டிப்போ) முகாமையாளர் டீசலை விநியோகிக்கவில்லை. இரவு நேரங்களில் கள்ள சந்தை வியாபாரிகளுக்கு பெருமளவான டீசல் வழங்கப்படுகின்றது. பயணிகள் சேவையில் ஈடுபடும் எமக்கு டீசல் வழங்க இழுத்தடிப்புகள் செய்து உரிய ஒழுங்கில் டீசல் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டியே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதேவேளை கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்னர் , யாழ்ப்பாணம் கோண்டாவில் சாலை (டிப்போ) எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தமக்கு டீசல்கள் வழங்கப்படுவதில்லை என தனியார் பேருந்து சாரதிகள் போராட்டம் நடாத்தி இருந்தனர்.

அவர்களுடன் யாழ்.மாவட்ட செயலர் க, மகேசன் பேச்சுக்களை நடாத்தி உரிய ஒழுங்கில் டீசல் பெற்று தர நடவடிக்கை எடுப்பேன் என உறுதி அளித்து இருந்த நிலையில் , பருத்தித்துறை சாலைக்கு (டிப்போ) எதிராக போராட்டம் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

3 2 3 9 3 10 3 1 3 4 3 7 3 6 3 5

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
பூசா சிறைச்சாலை
இலங்கை

மஹர சிறைச்சாலையில் இருந்து இடம்மாற்றப்பட்ட கைதிகள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தினை அடுத்து, அங்கிருந்து 20 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச்...

prison
இலங்கை

கட்டுப்பாட்டிற்குள் வந்த பதற்ற நிலை – வெளியேறிய தீயணைப்பு வாகனங்கள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அனைத்துக் கைதிகளையும் தற்போது அவர்களது சிறைக்...

Scammers
இலங்கை

அமைச்சரின் பெயரில் இடம்பெறும் பாரிய மோசடி.

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க பிரதி அமைச்சரை போல் ஆள்மாறாட்டம்...

Featured
இலங்கை

மஹர சிறையில் தற்போதைய நிலை .

ராகம பொலிஸ் எல்லைக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சுற்றியுள்ள A, 246/கண்டலியத்த பாலுவ – மேற்கு, 246/C...