24 664ed157caf0c
இலங்கைசெய்திகள்

நாட்டின் பல பகுதிகளின் மின் விநியோகம் பாதிப்பு

Share

நாட்டின் பல பகுதிகளின் மின் விநியோகம் பாதிப்பு

நாட்டில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக அதிகளவான பகுதிகளில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜயசேகர (Kanchana Wijesekera) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் (X) தளத்தில் இட்டுள்ள பதிவிலேயே குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த 3 நாட்களில் 36,900 மின் கம்ப சேதங்கள் பதிவாகியுள்ளன.

இதன் காரணமாக 300,000இற்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு மின் விநியோகம் வழங்குவது தடைப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த பாதிப்புக்களை சீராக்குவதற்காக ஊழியர்கள், 24 மணிநேரமும் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், மின்சாரம் தடைபட்ட இடங்களுக்கு அடுத்த 24 மணித்தியாலங்களில் மின்சாரம் விநியோகிக்கப்படவுள்ளது.

அதேவேளை, மின்சார பாவனையாளர்கள், தங்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் 1987 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அல்லது குறுஞ்செய்தி மூலம் தொடர்பு கொள்ளலாம்” என சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
Semmani Manhole
இலங்கை

எழுமாறாக தோண்டப்பட்ட குழிகளிலும் எலும்புக்கூடுகள்!

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட 101 நாள் அகழ்வுப் பணிகளில் மொத்தம் 515 மனித...

Namal
இலங்கை

நாங்கள் மனித நேயத்துடன் மட்டுமே செயலாற்றுவோம் – நாமல்.

மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, மொட்டுக் கட்சியின் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும்...

Court order
இலங்கை

மீண்டும் நீதிமன்றுக்கு வந்த பவானி வீதி வழக்கு – நீதிமன்று வழங்கிய தீர்ப்பு !

தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பவானி வீதியை விடுவிப்பதற்குத் தடைபோடும் வகையில் பலாலி காவல்துறையினரின் சார்பில்...

Weaponsgdg
இலங்கை

கலவரத்தினை கட்டுப்படுத்த ஏற்பட்ட தாமதம் – சிறைகளில் உள்ள ஆயுத பற்றாக்குறைகள்

நாட்டில் உள்ள ஒன்பது சிறைச்சாலைகளில் பல்வேறு துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 2,327 தோட்டாக்கள் நீண்டகாலமாகப் பயன்படுத்த முடியாத...