“நாட்டுக்காக பிரதமர் பதவியை துறப்பதற்கு மஹிந்த ராஜபக்ச தயாராகவே இருக்கின்றார். எனினும், அந்த முடிவை எடுப்பதற்கு பிரதமருக்கு சிலர் தடையாக உள்ளனர் என்ற சந்தேகம் எமக்கு ஏற்பட்டுள்ளது. ” – இவ்வாறு ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் லலித் எல்லாவல தெரிவித்தார்.
ஊழல், மோசடிகளில் இருந்து தம்மை பாதுகாக்க முற்படும் தரப்பே, இவ்வாறு பிரதமருக்கு தடையை ஏற்படுத்திவருகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.
சர்வக்கட்சி அரசமைப்பதற்கு வழிவிட்டு, பிரதமர் பதவி விலகாவிட்டால், ஆளுங்கட்சியில் உள்ள 10 பேர் அணி காத்திரமானதொரு முடிவை எடுக்கும் எனவும் லலித் எல்லாவல திட்டவட்டமாக அறிவித்தார்.
#SriLankaNews
Leave a comment