mahintha.jpgg
அரசியல்இலங்கைசெய்திகள்

தலைவரே, பதவி விலகுங்கள்! – மஹிந்தவை நெருக்கும் சகாக்கள்

Share

” தலைவரே, நீங்கள் பதவி விலகி, புதிய பிரதமராக தினேஷ் குணவர்தனவை நியமியுங்கள். இல்லையேல் நம்பிக்கையில்லாப் பிரேரணை பெரும் சவாலாக அமைந்துவிடும்.”

இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் சிலர் பிரதமர் மஹிந்த ராஜபகசவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச உள்ளடங்களான அமைச்சரவை உடனடியாக பதவி விலகி, சர்வக்கட்சி இடைக்கால அரசொன்றை அமைப்பதற்கு வழிவிட வேண்டும் – என கோரிக்கை விடுத்து, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான டலஸ் அழகப்பெரும ஜனாதிபதிக்கு நேற்று கடிதமொன்றை அனுப்பினார்.

இந்த கடிதம் ஊடகங்களில் வெளிவந்த பின்னர், ஆளுங்கட்சி உறுப்பினர்கள் சிலர் பிரதமரை சந்தித்து, பேச்சு நடத்தியுள்ளனர். அவ்வேளையிலேயே புதிய பிரதமராக தினேஷ் குணவர்தனவை நியமிக்குமாறு கோரியுள்ளனர் .

எனினும், ராஜபக்சக்களின் விசுவாசியான தினேஷை பிரதமராக ஏற்பதற்கு 11 கட்சிகளின் கூட்டணி தயாரில்லை எனக் கூறப்படுகின்றது. அக்கட்சிகளின் தேர்வு டலஸ் அழகப்பெருமவாக இருக்கின்றது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Gotabaya Rajapaksa 24
இலங்கை

கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த மனு மீதான உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய,...

Cyclone
இலங்கை

பசுபிக் பெருங்கடலில் உருவாகி வரும் சூறாவளி – வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள தகவல்.

நாளைய தினம் நண்பகல் முதல், தற்போது நிலவும் மழை நிலைமையானது சிறிதளவு குறைவடையுமென எதிர்பார்க்க முடியும்...

pers
இலங்கை

மறு அறிவித்தல் வரை மூடப்பட்ட பேராதனை பல்கலைக்கழகம் – மாணவர்களுக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்கள்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அனைத்துக் கல்வி நடவடிக்கைகளும், பரீட்சைகளும் நிலவும் சீரற்ற வானிலையைக் கருத்திற்கொண்டு மறுஅறிவித்தல் வரை...

school closd
இலங்கை

தொடரும் சீரற்ற காலநிலை – பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள விடுமுறை.

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்ட நிலையில், நாளைய தினம், கண்டி மாவட்டத்தின்...