Fuel
இலங்கைசெய்திகள்

எரிபொருள் விலை- 70 ரூபாவால் குறைக்க முடியும்!!

Share

பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை 70 ரூபாவால் குறைக்க முடியும் என ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த் பாலித தெரிவித்துள்ளார்.

உலக சந்தையில் மசகு எண்ணையின் விலை பீப்பாய் ஒன்றுக்கு 27 அமெரிக்க டொலர்களாக விற்பனை செய்யப்படுவதால் நாட்டிற்கு கொண்டு வரப்படும் அனைத்து எரிபொருளின் விலையும் 70 ரூபாவால் குறைக்க முடியும் என தெரிவித்துள்ளார்.

எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிமுகப்படுத்திய எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைய கடந்த 15ம் திகதி எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்பட்டிருக்க வேண்டும் எனவும் சுட்டிக்காடினார்.

உலக சந்தையில் எரிபொருளின் விலை குறைவடைந்திருப்பதால் அதன் பலனை நாட்டு மக்களும் அனுபவிக்க வேண்டும் எனவும் அதற்கமைய எரிபொருளின் விலையை 70 ரூபாவால் குறைக்க முடியும் எனவும் தெரிவித்தார்.

ஒரு லீட்டர் 95ரக பெட்ரோலுக்கும் சுப்பர் டீசலுக்கும் முறையே 80 ரூபா மற்றும் 67 ரூபா வரி விதிக்கப்படுகிறது.இதே வேளை ஒரு லீட்டர் மண்ணெண்ணையின் விலையை 220 ரூபவாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இவை பலதரப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் செயற்பாடு எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
பூசா சிறைச்சாலை
இலங்கை

மஹர சிறைச்சாலையில் இருந்து இடம்மாற்றப்பட்ட கைதிகள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தினை அடுத்து, அங்கிருந்து 20 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச்...

prison
இலங்கை

கட்டுப்பாட்டிற்குள் வந்த பதற்ற நிலை – வெளியேறிய தீயணைப்பு வாகனங்கள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அனைத்துக் கைதிகளையும் தற்போது அவர்களது சிறைக்...

Scammers
இலங்கை

அமைச்சரின் பெயரில் இடம்பெறும் பாரிய மோசடி.

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க பிரதி அமைச்சரை போல் ஆள்மாறாட்டம்...

Featured
இலங்கை

மஹர சிறையில் தற்போதைய நிலை .

ராகம பொலிஸ் எல்லைக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சுற்றியுள்ள A, 246/கண்டலியத்த பாலுவ – மேற்கு, 246/C...