ajith nivard cabraal 78678
அரசியல்இலங்கைசெய்திகள்

கப்ராலுக்கு எதிரான மனு நிராகரிப்பு!

Share
இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட தனிப்பட்ட முறைப்பாட்டு மனுவை நிராகரிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவெல, வியாழக்கிழமை (06) உத்தரவு பிறப்பித்தார்.மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸினால் முன்வைக்கப்பட்ட பூர்வாங்க ஆட்சேபனைகளை கருத்தில் கொண்டே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

குற்றச்சாட்டுகளை ஆதரிப்பதற்கு போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தினாலும், இதே போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது என்பதன் அடிப்படையிலான உண்மைகளை மறைத்ததாலும் வழக்கை முன்னெடுப்பதை சவால் செய்யும் பூர்வாங்க ஆட்சேபனைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரின் தீர்மானங்களினால் நாட்டில் தற்போதைய நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறி கீர்த்தி தென்னகோன் அவருக்கு எதிராக தனிப்பட்ட முறைப்பாடு செய்திருந்தார்.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 136(1)(அ) பிரிவின் கீழ், தென் மாகாண முன்னாள் ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னகோனினால் தாக்கல் செய்த தனிப்பட்ட முறைப்பாட்டில் 500 மில்லியன் அமெரிக்க டொலர் இறையாண்மை பத்திரத்தை செலுத்த நடவடிக்கை எடுத்ததில் இருந்து நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு கப்ரால் தான் காரணம் என்று சுட்டிக்காட்டியிருந்தார்.

2005 ஆம் ஆண்டு முதல் 2015 வரை மத்திய வங்கியின் ஆளுநராக அஜித் நிவார்ட் கப்ரால் செயற்பட்ட காலப்பகுதியில் இலங்கை அரசாங்கத்துக்கு, 10.4 முதல் 10.6 பில்லியன் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

குற்றவியல் நம்பிக்கை மீறலுக்காக தண்டனைச் சட்டத்தின் 388ஆவது பிரிவின் கீழ் கப்ரால் தண்டனைக்குரிய குற்றத்தைச் செய்ததாகவும் பதிவுசெய்யப்பட்ட பங்கு மற்றும் பத்திரங்கள் கட்டளைச் சட்டத்தின் கீழ் குற்றங்களைச் செய்ததற்கு முன்னாள் ஆளுநரும் பொறுப்பு எனவும்  குற்றம் சுமத்தியிருந்தார்.

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Motorcycle Accidnet
இலங்கை

இளைஞரின் உயிரை பறித்த மோட்டார் சைக்கிள்.

களுத்துறை மாவட்டம், மில்லேவ பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 29 வயதுடைய...

eids
இலங்கை

இலங்கையில் பரவலடையும் நோய்கள் – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை.

  நாட்டில் எய்ட்ஸ் அல்லாத பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாலியல் நோய்த்தொற்றுகள்  பதிவாகியுள்ளதுடன் , குறித்த நோயாளிகள்...

negambo
இலங்கை

அனுர அரசை கவிழ்க்க சிறையில் தீட்டப்பட்ட சதித்திட்டம்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்க்கும் மாபெரும் சதித் திட்டம் ஏதாவது நீர்கொழும்பு சிறைச்சாலையில்...

preschool kids
இலங்கை

அனைவரும் சமம் – அரசாங்கம் கொண்டுவரும் சிறந்த திட்டம்.

  அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பில் கலந்து...