jaffna pongal
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பொங்கலில் ஆர்வம் காட்டாத மக்கள்!

Share

யாழ்ப்பாணத்தில் தை பொங்கல் பொருள் கொள்வனவில் மக்கள் ஆர்வம் காட்டவில்லை!வியாபாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம்- திருநெல்வேலி சந்தைப் பகுதியில் வழமையாக பொங்கல் தினத்திற்கு முதல் நாள் பொருட்கள் கொள்வனவு செய்வதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டுவதால் வீதி முழுவதும் சனக்கூட்டம் நிறைந்து காணப்படும் நிலையில் இம்முறை தைப்பொங்கலுக்கு பொருட்கள் கொள்வனவு செய்வதில் பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டவில்லை என வியாபாரிகள் கவலை வெளியிட்டுள்ளார்கள்

தமிழர்களின் திருநாளாகிய தைப்பொங்கல் திருநாள் நாளை இடம்பெறவுள்ள நிலையில் பொதுமக்கள் வழமைபோல் பொருட்களைக் கொள்வனவு செய்வதில் நாட்டம் காட்டவில்லை

யாழில் வழமையாக இடம்பெறும் வியாபாரத்தை போல இம்முறை பொங்கல் வியாபாரம் இடம்பெறவில்லை.

jaffna pongal 01

தற்போது விலைவாசி அதிகரிப்பு மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடு காரணமாக மக்கள் இம்முறை பொங்கல் பொருள் கொள்வனவில் அதிக நாட்டம் காட்டவில்லை என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

நல்லூர் பிரதேச சபையினால் திருநெல்வேலி பகுதியில் வழமையாக பொங்கல் தினத்திற்கு முதல்நாள் சன நெருக்கடி ஏற்படுவதன் காரணமாக இம்முறை சனக்கூட்டத்தை தவிர்க்கும் முகமாக நல்லூர் பிரதேச சபையினர் திருநெல்வேலி சந்தையின் முன் வீதியினை ஒரு வழிப்பாதையாக அறிவித்திருந்தது.

இருப்பினும் பொதுமக்கள் தைப்பொங்கலுக்கான பொருட்கள்கொள்வனவு செய்வதில் நாட்டம் காட்டவில்லை.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
பூசா சிறைச்சாலை
இலங்கை

மஹர சிறைச்சாலையில் இருந்து இடம்மாற்றப்பட்ட கைதிகள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தினை அடுத்து, அங்கிருந்து 20 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச்...

prison
இலங்கை

கட்டுப்பாட்டிற்குள் வந்த பதற்ற நிலை – வெளியேறிய தீயணைப்பு வாகனங்கள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அனைத்துக் கைதிகளையும் தற்போது அவர்களது சிறைக்...

Scammers
இலங்கை

அமைச்சரின் பெயரில் இடம்பெறும் பாரிய மோசடி.

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க பிரதி அமைச்சரை போல் ஆள்மாறாட்டம்...

Featured
இலங்கை

மஹர சிறையில் தற்போதைய நிலை .

ராகம பொலிஸ் எல்லைக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சுற்றியுள்ள A, 246/கண்டலியத்த பாலுவ – மேற்கு, 246/C...