போராட்டத்தில் அநுரகுமார
அரசியல்இலங்கைசெய்திகள்

இந்த அரசை மக்கள் நம்பவில்லை! – அநுர தெரிவிப்பு

Share

“தலை மாறி ஆட்சி அமைத்தாலும் மக்கள் இந்த அரசை நம்பவில்லை. மக்களின் நம்பிக்கையில்லாத ஆட்சியாளரால் இந்த நெருக்கடியிலிருந்து வெளிவர முடியாது.”

– இவ்வாறு ஜே.வி.பியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஒரு நாட்டுக்கு இயற்கைப் பேரிடர் ஏற்பட்டால் அதை எதிர்கொள்வது நமது கடமை. ஆனால், இது நீங்கள் உருவாக்கியது நெருக்கடி.

விவசாயப் பிரச்சினை நாடாளுமன்றத்தில் எத்தனை தடவை எழுப்பப்பட்டது?

விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டபோது, விவசாயிகளைத் தூண்டு விடுவதாகக் கூறினீர்கள்.

இப்போது தாம் தவறு இழைத்துவிட்டோம் என்று ஜனாதிபதி புலம்புகின்றார்.

நாட்டுக்கு ஒரு கொடிய பேரழிவை ஏற்படுத்திய ஜனாதிபதியைக் குறை சொல்ல வேண்டுமா?

அவர் விவசாயிகளின் வாழ்க்கையை அழித்துவிட்டார். இப்போது அவர் புலம்புகின்றார்” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
tax us
இலங்கை

அமெரிக்கா வழங்க போகும் வரப்பிரசாதம்.

அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் மகிந்த சமரசிங்க இலங்கையின் ஏற்றுமதிகளுக்கான அமெரிக்காவின் வரிச்சலுகைகள் தொடர்பாக எதிர்காலத்தில் அமெரிக்காவிடமிருந்து...

Expired Medical
இலங்கை

பிரபல தனியார் மருந்தகங்களில் இடம்பெற்ற மோசடிகள் அம்பலம்.

நாடளாவிய ரீதியிலுள்ள தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ ஆய்வகங்களில் பெருமளவிலான காலாவதியான மற்றும் தரமற்ற மருத்துவ...

arested 2
இலங்கை

காணித்தகராறால் பறிக்கப்பட்ட இளம் குடும்பஸ்தரின் உயிர்.

காணித் தகராறு காரணமாக, அனுராதபுரம், இராஜாங்கனை பிரதேசத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள...

சி.டி.விக்ரமரத்ன
இலங்கை

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்து கொண்டுள்ளார் – பின்னணியில் இருக்கும் முக்கிய புள்ளி.

மாலபே, தலஹேன பிரதேசத்தில் உள்ள தனது இல்லத்தில் வைத்து முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன...