VideoCapture 20220430 114428 1
அரசியல்இந்தியாஇலங்கைசெய்திகள்

திருச்செந்தூரில் தரிசனம் செய்த வடக்கு ஆளுநர்! – தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவிப்பு

Share

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் எமது நாட்டுக்கு உதவி செய்ய முன்வந்த தமிழக முதல்வருக்கு இலங்கை மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்வதாக வடக்கு மகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் எமது நாட்டுக்கு 123 கோடி ரூபா மதிப்பில் உணவு, பால்மா , மருந்து, உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தமிழக அரசு சார்பில் வழங்க தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் இதற்கு அனுமதி வழங்கிட இந்திய மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில் வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்தார்.

இதன்பின்னர் இந்திய ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

எமது நாட்டில் நிலவக்கூடிய இந்த கஷ்ட காலத்தில் இந்திய மத்திய அரசு மூலமாக உதவி செய்ய முன்வந்த தமிழக முதல்வரை நேரில் சந்தித்து நன்றி தெரிவிப்பேன்.

இந்தியாவிடமிருந்து தற்போது மருத்துவ உதவிகள் கிடைத்துள்ளது. தொடர்ந்து எந்த மாதிரி நடவடிக்கைகள் தேவை என்பதை இலங்கை அரசு பரிசீலனை நடத்திவருகிறது.

தற்போதைய சூழலில் இலங்கை மக்களுக்கு இந்திய அரசு உணவுகளை தடையின்றி வழங்குவதே சிறந்த உதவியாக இருக்கும்.

இந்தியா தவிர்த்து மற்ற நாடுகளும் இலங்கை மக்களுக்கு உதவி செய்ய இலங்கை அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...