vikneshwaran
அரசியல்இலங்கைசெய்திகள்

13 ஆல் தீர்வு கிடைக்காது!!

Share

13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தினாலும், அதன் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு முழுமையான தீர்வு கிடைக்காது என பாராளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு  கருத்து வெளியிடும் போதே அவர் நேற்று (08) இதனை கூறினார்.

அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஒற்றையாட்சி நாட்டுக்குள் பெரும்பான்மை மக்களின் கருத்துக்களையே அரசாங்கம் நிறைவேற்றும் என்று கூறிய அவர் தான் முதலமைச்சராக இருந்த போது, இதனை நன்றான உணர்ந்துகொண்டதாக குறிப்பிட்டார்.

இதனால், சமஷ்டியை கோருவதுடன்,  தற்போது 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தினால் சிறந்தது என்றும், அதனை நடைமுறைப்படுத்த அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிக்கு இடையில் என்ன நடக்கும் என்பது தெரியாத என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் தற்போது தீர்வை தருவதாக கூறியுள்ள நிலையில், நாங்களும் அதனை ஏற்றுக்கொள்கிறோம் எனவும் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
k d
இலங்கை

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை.

இலங்கை மக்களுக்கு பலத்த காற்று தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் வடமேல்...

G.L.Peiris
இலங்கை

அனைத்து மக்களும் ஒன்றிணைந்தால் சாத்தியம் என்கிறார் முன்னாள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்

கூட்டு எதிரணியின் அரசியல் பிரமுகர்கள் சர்வமதத் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடி வருகின்றனர், இந்த நிலையில் இது...

dengue
இலங்கை

அதி அபாய மட்டத்தில் டெங்கு – பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

2026 ஆம் வருடத்தில் இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 68,071 ஆக பதிவாகி உள்ளதாக...

money
இலங்கை

அதிரடியாக உயர்த்தப்பட்ட சில கட்டணங்கள்.

  வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க ,...