மின் தடை இல்லை
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மே 1, 3ஆம் திகதிகளில் மின் தடை இல்லை!

Share

எதிர்வரும் 1ஆம் மற்றும் 3ஆம் திகதிகளில் மின்வெட்டை மேற்கொள்ளாதிருக்க மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

மே 1ஆம் திகதி தொழிலாளர் தினம் என்பதுடன், மே 3ஆம் திகதி புனித ரமழான் தினத்தை முன்னிட்டு இவ்வாறு மின்துண்டிப்பை மேற்கொள்ளாதிருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனினும், 2ஆம் மற்றும் 4ஆம் திகதிகளில் 3 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்வெட்டை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சுழற்சி முறையில் 2 மணித்தியாலங்களும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை சுழற்சி முறையில் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின் துண்டிப்பு அமுலாகவுள்ளது.

அவ்வாறே, கொழும்பு முன்னுரிமை வலயங்களில் (CC) காலை 6 மணி முதல் 9 மணி வரை 3 மணித்தியாலங்களும் மின் துண்டிப்பு இடம்பெறும் என்று பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
vellam 2
இலங்கை

களனி மற்றும் களு கங்கைகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்பில் வெளியான தகவல்கள்.

நேற்றைய தினம், பிற்பகல் 1.30 மணிக்கு களனி கங்கையை ஒட்டி பெரு வெள்ள அபாயமும், பிற்பகல்...

Gregory
இலங்கை

கிரிகோரி ஏரியின் வான்கதவுகள் திறப்பு.

இன்றைய தினம் பிற்பகல், நுவரெலியா பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக கிரிகோரி ஏரியின் நீர்மட்டம்...

யோஷித ராஜபக்ஷ
இலங்கை

யோஷித ராஜபக்ஷவிற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படை தளபதி வசந்த...

heavy rain
இலங்கை

நோர்ட்டன் பகுதியில் 258.6 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவு.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவித்தலில் படி, கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகபட்ச மழைவீழ்ச்சி நுவரெலியா –...