ஓகஸ்ட் மாத சம்பளம் கொரோனா நிதியத்துக்கு!
அரசியல்இலங்கைசெய்திகள்

அடுத்த வாரம் புதிய அமைச்சரவை!

Share

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அண்மையில் நியமிக்கப்பட்டுள்ள தற்காலிக அமைச்சரவைக்கு பதிலாக, அடுத்த வாரம் புதிய அமைச்சரவை நியமிக்கப்படவுள்ளது என அரச வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

சர்வகட்சி அரசு அமைப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனைத்து அரசியல் கட்சிகளுடனும் கலந்துரையாடியுள்ள போதிலும், அது தொடர்பில் இறுதி இணக்கப்பாடு எட்டப்படாத நிலையில், அனைத்துக் கட்சிகளின் கீழ் புதிய அமைச்சரவை நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக அறியமுடிகின்றது.

இந்த அமைச்சரவை நியமனத்தின் போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் அமைச்சரவை அமைச்சுப் பதவிகளை வழங்க வேண்டிய மாவட்ட தலைவர்களின் பெயர் பட்டியல் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கலாநிதி ரமேஷ் பத்திரன, பிரசன்ன ரணதுங்க, ஜனக பண்டார தென்னகோன், ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ரோஹித அபேகுணவர்தன, சி.பி.ரத்நாயக்க, பவித்ரா வன்னியாராச்சி, எஸ்.எம்.சந்திரசேன, நாமல் ராஜபக்ச, கலாநிதி பந்துல குணவர்தன, சனத் நிஷாந்த, காஞ்சன விஜேசேகர ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அறியமுடிகிறது.

புதிய அமைச்சரவையில் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் பலர் உள்வாங்கப்பட உள்ளதாகவும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஜீவன் தொண்டமான் மற்றும் தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம்.அதாவுல்லா ஆகியோரும் அமைச்சர்களாக நியமிக்கப்பட உள்ளதாகவும் தெரியவருகிறது.

சர்வகட்சி அரசொன்றை அமைக்க முடியாத பட்சத்தில் தேசிய அரசை அமைப்பது தொடர்பிலும் அரசாங்கம் ஆலோசித்து வருவதாக தெரியவருகிறது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
சரத் அபேகோன்n
இலங்கை

பதிவி ஏற்கும்போதே ஜனாதிபதியிடம் குறிப்பிட்டேன்.

மத்திய மாகாண ஆளுநர் பதவியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்து, ஜனாதிபதிக்குத் தான் அனுப்பிய கடிதத்திற்கு இதுவரை எந்தவொரு...

yositha 1
இலங்கை

ஒத்திவைக்கப்பட்டது யோஷிதவின் வழக்கு.

பணமோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு கொழும்பு மேல்...

arested 3
இலங்கை

வெளிநாட்டு குண்டுகளுடன் ஒருவர் கைது – கைப்பற்றப்பட்ட ஆயுத தொகுதி !

யக்கல பிரதேசத்தில் வைத்து, ராகமவைச் சேர்ந்த 42 வயதுடைய நபரொருவர் 2 கையெறி குண்டுகள் மற்றும்...

arrest warrant d
இலங்கை

முக்கிய நபர்கள் மீது பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவு.

நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண உள்ளிட்ட...