murugan
இந்தியாஇலங்கைசெய்திகள்

உண்ணாவிரதத்தை கைவிட்டார் முருகன்

Share

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் ஜெயிலில் அடைக்கப் பட்டுள்ள முருகன், பரோல் வழங்க வலியுறுத்தி பலமுறை சிறை நிர்வாகத்திடம் மனு அளித்தார்.

அவர் மீது சிறை விதிமீறல் உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதால் சிறை நிர்வாகம் மறுத்துவிட்டது. வழக்கை விரைந்து விசாரிக்க வலியுறுத்தி முருகன் கடந்த மாதம் 8-ந் தேதி முதல் உண்ணாவிரதம் இருந்தார்.

சிறை அதிகாரிகள் அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.ஆனால் முருகன் உண்ணாவிரதத்தை கைவிட வில்லை. ஜெயில் உணவை தவிர்த்து அவர் தண்ணீர் மற்றும் பழங்கள் மட்டுமே சாப்பிட்டார்.

முருகனின் உடல்நிலை மோசமானதால் அவருக்கு ஜெயில் வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் குளுக்கோஸ் ஏற்றப்பட்டது‌. தொடர்ந்து டாக்டர்கள் அவரது உடல் நிலையை கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த வாரம் சிறை காவலர் ஒருவரை அவதூராக பேசிய வழக்கு சம்பந்தமாக முருகன் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார். அவரிடம் உண்ணாவிரதத்தை கைவிடக்கோரி சிறை அதிகாரிகள் நேற்று பேச்சு வார்த்தை நடத்தினர்.

இதனை தொடர்ந்து 52 நாட்களுக்கு பிறகு முருகன் உண்ணாவிரதத்தை கைவிட்டார். இன்று காலை அவர் ஜெயில் உணவை சாப்பிட்டார்.

#India

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 27
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சன்ரைசர்ஸை வீழ்த்தி நடப்பு சாம்பியன் பெங்களூரு அணி அபார வெற்றி!

ஐபிஎல் 2026 தொடரின் தொடக்க ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி,...

Untitled 26
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின்சாரக் கட்டணத் திருத்தம்: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இறுதி முடிவு நாளை!

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலப்பகுதிக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த தனது...

Untitled 25
உலகம்செய்திகள்

ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் புதிய ஏஐ இரகசியங்கள் கசிவு: சைபர் பாதுகாப்பு நிறுவனங்களுக்குப் பெரும் சவால்!

உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனமான ஆந்த்ரோபிக் (Anthropic), உருவாக்கி வரும் தனது அடுத்த...

01 39
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீன ஆய்வுக்கப்பல் ஊழியருக்கு அவசர சிகிச்சை: மனிதாபிமான அடிப்படையில் உதவிய இலங்கை கடற்படை!

இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் (EEZ) நங்கூரமிட்டிருந்த சீன ஆய்வுக்கப்பலான ‘ஷி யான் 6’ (Shi...