அகில இலங்கை கம்பன் கழகமும் அவுஸ்திரேலிய கம்பன் கழகமும் இணைந்து நடத்தும் ‘முந்துதமிழ்” எனும் மாதாந்த இயலரங்கின் செப்டெம்பர் மாத நிகழ்வு நாளை மறுதினம் 25ஆம் திகதி சனிக்கிழமை மாலை 3.30 மணிக்கு நிகழ்நிலை நிகழ்வாக நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வு அவுஸ்திரேலியாவை சேர்ந்த சிவாச்சாரியார் சிவஸ்ரீ இந்திரன் குருக்களின் மங்கல ஆராத்தியோடு ஆரம்பமாகவுள்ளது.
நிகா்வில் சிறப்பு நிகழ்வாக தமிழ்நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் கண.சிற்சபேசன்ஐயாவின் தலைமையில் ‘ஊழிற்பெருவலியாவுள’ என்ற பொருளிலான கருத்தரங்கு இடம்பெறவுள்ளது.
சிலப்பதிகாரத்தில் ஊழ் பேராசிரியர்.ஸ்ரீ.பிரசாந்தன் அவர்களும் திருக்குறளில் ஊழ் பேராசிரியர். இ.இராமச்சந்திரன் அவர்களும் கம்பராமாயணத்தில் ஊழ் புலவர் இரா.இராமமூர்த்திஅவர்களும் விரித்துரைக்க உள்ளனர்.
உலகெங்கிலும் நோயும் அச்சமும் நிறைந்திருக்கும் இன்றைய நிலையில் நம் துன்பங்களுக்கெல்லாம் காரணமானதாக சொல்லப்படும் ஊழின் வலியை அறிந்து பயன்பெற பெரியோர்கள் கூடி துணைசெய்ய இருக்கிறார்கள். இந்நிகழ்வை அனைவரும் கண்டுகளித்து பயன்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாதமும் இறுதி சனிக்கிழமை மாலை 3.30 மணிக்கு முந்துதமிழ் நிகழ்வு இடம்பெறும் என நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Leave a comment