8156fbd7 28a9a3b4
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மோட்டார் சைக்கிள் விபத்து! – இளைஞன் மரணம்

Share

தனது பிறந்தநாள் நேற்று மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞனும் மற்றுமொரு இளைஞனும் நேற்றைய தினம் திங்கட்கிழமை மோட்டார் சைக்கிளில் சென்ற போது மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கு உள்ளானது.

அதில் பயணிந்த யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் பகுதியை சேர்ந்த குணசேகரன் நிக்சன் (வயது-22) எனும் இளைஞன் உயிரிழந்துள்ளார். அவருடன் பயணித்த ரவிகரன் கனிஸ்டன் (வயது-20) என்பவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த இளைஞனின் பிறந்தநாள் நேற்றைய தினமாகும். அந்நாளில் இருவரும் மோட்டார் சைக்கிளில் அராலி – வல்லை வீதியில் பயணித்த வேளை, தெல்லிப்பழை அம்பனை சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியோரமாக இருந்த வேலி தூணுடன் மோதி விபத்துக்கு உள்ளானது.

சம்பவம் தொடர்பில் தெல்லிப்பழை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
road closed
இலங்கை

வெள்ளப்பெருக்கினால் மூடப்பட்டுள்ள வீதிகள்.

தொடர்ந்தும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தற்போது பல பிரதேசங்களில் ஏராளமான வீதிகள் போக்குவரத்திற்கு தற்காலிகமாக...

ester attac 1
இலங்கை

பிள்ளையான் – சுரேஷ் சலே திண்டாட்டத்தில் இருப்பதாக வெளியாகிய தகவல்.

பிரித்தானியாவைச் சேர்ந்த இராணுவ ஆய்வாளர் பிரபாகரன், பிரபல ஊடக நிறுவன நிகழ்ச்சி ஒன்றில் கருத்து தெரிவிக்கும்...

Fire Breaks
இலங்கை

புறக்கோட்டை வர்த்தக நிலையத்தில் திடீரென ஏற்பட்ட தீ பரவல்.

கொழும்பு புறக்கோட்டை பிரதான வீதியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் திடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளது. குறித்த...

உடற்கூற்று பரிசோதனை
இலங்கை

மஹர சிறைக்கலவரத்தில் உயிரிழந்த நபரின் உடற்கூற்று பரிசோதனை – வெளியான தகவல்கள்.

இன்றைய தினம், மஹர சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த கைதியின் சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனை விசேட...