china 1
இலங்கைசெய்திகள்

குரங்குகள் மிருகக்காட்சிசாலைகளுக்கு என்பது நம்பகத்தன்மையற்றது!!

Share

குரங்குகள் மிருகக்காட்சிசாலைகளுக்கு என்பது நம்பகத்தன்மையற்றது!!

100,000 குரங்குகளில் முதல் தொகுதி குரங்குகள் சீனாவின் ஆய்வுகூடங்களுக்குச் செல்லலாம் என சுற்றுச்சூழல் நீதிமைய நிர்வாகப் பணிப்பாளர் ஹேமன்த விதானகே தெரிவித்துள்ளார்.இந்தக் குரங்குகள் ஒப்பனைப் பொருட்களுக்கான பரிசோதனைகளுக்கும் மருத்துவப் பரிசோதனைகளுக்கும் பயன்படுத்தப்படலாம் என அவர் தெரிவித்தார்.

“சீனாவில் 18 மிருகக் காட்சி சாலைகள் மட்டுமே உள்ளன. அவை ஒவ்வொன்றிலும் சராசரியாக 5,000 குரங்குகள் இருக்கின்றன. எனவே இந்தக் குரங்குகள் சீனாவிலுள்ள மிருகக்காட்சிசாலைகளுக்கு அனுப்பப்படுகின்றன எனும் கூற்று நம்பகத்தன்மையற்றதாகும்“.

“100,000 குரங்குகளை அரசாங்கம் சீனாவிற்கு அனுப்பினாலும் நாட்டில் குரங்குகளின் தொகை குறையாது.

இந்தக் குரங்குகள் சீனாவிலுள்ள உயிரியல் பூங்காவிற்கு அனுப்பப்படுவதாக இருந்தால் அவை இலங்கை மிருகக் காட்சிசாலைகளிலுள்ள விலங்குகளைப் போலவே பராமரிக்கப்பட வேண்டும். எமது மிருகக் காட்சி சாலைகளில் 100,000 டோக் இனக் குரங்குகள் இல்லை. எனவே இந்நிலைமையை நாட்டு சட்டத்தின் அடிப்படையில் நியாயப்படுத்த முடியாது“, என விதானகே தெரிவித்தார்.

“இந்த மிருகங்களை தலதா மாளிகைப் பகுதி, அநுராதபுரம் மற்றும் மிஹிந்தலை போன்ற பிரதேசங்களிலிருந்து பிடிக்க வேண்டும். அங்கு வாழ்வதற்கு எம்மைப் போலவே அந்தக் குரங்குகளுக்கும் உரிமையுள்ளது.

எனவே குறித்த பிரதேசங்களிலிருந்து குரங்குகளை அகற்றி சீன ஆய்வுகூடங்களுக்கு அனுப்பி அவற்றை சித்திரவதை செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது“.

“அமைச்சர் இந்த தீர்மானத்தை ரத்து செய்வார் என நாங்கள் நம்புகின்றோம். மிருகங்களை வேறு  நாட்டிற்கு ஏற்றுமதி செய்வது தொடர்பில் அமைச்சர் தனித்து முடிவெடுக்க முடியாது. ஆனால் வனவிலங்குகள் பணிப்பாளர் நாயகத்தால் நிலைமையை நியாயப்படுத்தி தீர்மானம் மேற்கொள்ள முடியும்.

அவ்வாறு செய்யப்படாவிட்டால், தற்போதைய வனஜீவராசிகள் சட்டத்தின் அடிப்படையில் சுற்றுச்சூழல் நீதிமையம் (CEJ) சட்டரிதியான நடவடிக்கை எடுக்கும்“ என விதானகே மேலும் தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
parlimen president
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயகவிடம் ஒப்படைக்கப்பட்ட விசேட அறிக்கை!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய குழுவின் அறிக்கை ஜனாதிபதி அநுர...

Laugfs Gas
இலங்கை

லாஃப்ஸ் எரிவாயு விலை ஓகஸ்ட் மாத விலைத்திருத்தங்கள்.

லாஃப்ஸ் எரிவாயு விலையிலும் ஓகஸ்ட் மாதத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த...

wether
இலங்கை

வானிலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு.

அடுத்துவரும் 36 மணித்தியாலங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நாளைய தினம் பல பிரதேசங்களில்...

நாடாளுமன்
இலங்கை

இன்றைய தினம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட இரண்டு சட்டமூலங்கள்!

இன்று பாராளுமன்றத்தில், விலங்குகள் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகால் சேவைகள் சபை...