uni teachers
இலங்கைசெய்திகள்

அரச அதிபரின் பதவி துஸ்பிரயோகத்துக்கு கல்வியமைச்சும் உடந்தை என்கிறது இலங்கை ஆசிரியர் சங்கம்

Share

மன்னார் அரச அதிபர், தனது பதவியை வைத்து செய்ய முயலும் சுயநலத்தேவைகளுக்கு வட மாகாண கல்வியமைச்சும் உடந்தையாக செய்யப்பட்டதை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாக கண்டித்துள்ளது.

இலங்கை ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் விடுத்துள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த செய்திக் குறிப்பில்,

நியமன விதிமுறைகளை மீறியும் குறித்த அதிபர் ஓய்வு பெறுவதற்கு ஐந்து மாதங்களே உள்ள நிலையில், மன்னார் அரச அதிபரின் கணவர் என்பதற்காக , மன்னார் மாவட்டத்திலுள்ள வங்காலை சென்.ஆன்ஸ் பாடசாலைக்கு முறையற்ற நியமனமாக வட மாகாண கல்வியமைச்சால் அதிபர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

புதிதாக அதிபராக நியமிக்கப்படும் பாடசாலையில், குறித்த அதிபர் மூன்று வருடங்கள் கட்டாயம் சேவையாற்ற வேண்டும் என்று நிபந்தனைகளைப் போடும் வட மாகாண கல்வியமைச்சு, மன்னார் அரச அதிபரின் கணவருக்காக, நெறிமுறைகளை மாற்றியமைப்பது பாரிய அநீதியான செயற்பாடாகும்.

மன்னார் அரச அதிபர், தனது பதவியை வைத்து செய்ய முயலும் சுயநலத்தேவைகளுக்கு வட மாகாண கல்வியமைச்சும் உடந்தையாக செய்யப்பட்டதை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாக கண்டிக்கின்றோம்.

குறித்த முறையற்ற அதிபர் நியமனம் நிறுத்தப்பட்டு பொருத்தமான முறையில் நியமனம் வழங்கப்படவேண்டும்.

குறித்த நியமனம் சீர்செய்யப்படவில்லையாயின், பாடசாலைகளில் அதிபராக நியமிக்கப்படும் ஒருவர் மூன்று வருடங்கள் தொடர்ச்சியாக அதே பாடசாலையில் கடமையாற்ற வேண்டும் என வட மாகாண கல்வியமைச்சு விதித்துவரும் நிபந்தனையை இலங்கை ஆசிரியர் சங்கத்தால் கேள்விக்கு உட்படுத்தப்படும் – என்றுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Arrested With
இலங்கை

கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பலங்கொட பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் காலி மாவட்ட குற்றப்பிரிவினரால் கைது...

Weapons
இலங்கை

சிறைச்சாலைக்குள் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் – தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட தேங்காய்கள்.

நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலின் போது கைதிகள் அதிகாரிகளைத் தாக்கப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கூர்மையான ஆயுதங்களின்...

ravi karunanayake cry 1
இலங்கை

ரவி கருணநாயக்கவிற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பாணை.

  இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இம் மாதம் 17ஆம் திகதி முன்னிலையாகுமாறு, கொழும்பு மாவட்ட...

penson
இலங்கை

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி தகவல்.

  வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்காக புதிய ஓய்வூதியத் திட்டத்தை விரைவாகத் தயாரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக...